சர்ச்சையில் சிக்கிய பேஷன் ஷோ!
'ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதை'யாக, இந்த பேஷன் ஷோ கலாசாரம், குழந்தைகள் மத்தியிலும் ஊடுருவியுள்ளது. லண்டனில், சமீபத்தில், குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நடத்தப்பட்டது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, அரைகுறை உடைகளை அணிவித்து, கேட்வாக், நடனம், பேச்சு போன்ற, பல்வேறு போட்டிகளை நடத்தினர்.இதில், சிறப்பாக செயல்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிரிட்டனை சேர்ந்த, குழந்தைகளுக்கான <உடைகளை தயாரிக்கும், பிரபலமான ரெடிமேட் நிறுவனம் தான், இந்த பேஷன் ஷோவை நடத்தியது.இந்த பேஷன் ஷோவுக்கு, மனித உரிமை ஆர்வலர்களும், சமூக நல விரும்பிகளும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.'தங்களின் பொருட்களை சந்தைபடுத்துவதற்கு, குழந்தை களை பகடை காய்களாக பயன்படுத்துவதுடன், அவர்களுக்கு அரைகுறை ஆடைகளை அணிவித்து, பிஞ்சு மனதில், நஞ்சை விதைப்பதா?' என, அந்த அமைப்பினர், கண்டனம் தெரிவித்துள்ளதால், குழந்தைகள் பேஷன் ஷோ, சர்ச்சையில் சிக்கியுள்ளது.— ஜோல்னா பையன்.