உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்!

* பருப்புகளுடன் மிளகாய் வற்றல் அல்லது வேப்பிலையை கலந்து வைத்தால், பூச்சி வராது* தனியா விதைகளை சூடான வாணலியில் வறுத்து எடுத்து வைத்தால், வண்டு வராமல் பல மாதங்கள் நன்றாக இருக்கும்*கொட்டை, நார் நீக்கிய புளியுடன் கல் உப்பை நன்றாக கலந்து புளி ஜாடியில் அடைத்து வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்*அரிசியை மொத்தமாக வாங்கி வைப்பவர்கள், அத்துடன் சில துண்டு வசம்பு அல்லது வேப்பிலையை கலந்து வைத்தால், பூச்சி, வண்டு வராது* கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து வைத்தால், பூச்சிகள் வராது*அலமாரி தட்டுகளில் பேப்பர் விரிக்கும் முன், அதனடியில் சில வேப்பிலைக் கொத்துகளை பரப்பினால் கரப்பான் பூச்சிகள், எறும்புகள் அண்டாது*முட்டை ஓட்டின் மேல் லேசாக நல்லெண்ணெயை தடவி வைத்தால், 'பிரிஜ்'ஜில் வைக்காவிட்டாலும், 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !