உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்!

* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது, அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால், ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்* பஜ்ஜி மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால், அவலை பொடி செய்து சேர்க்கலாம்* எந்த வகை உப்புமா செய்தாலும் சரி, இறக்குவதற்கு முன் இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து கிளறினால், சுவையாக இருக்கும்* உருளை, சேனை, கருணை கிழங்கு சமைக்கும்போது, கடுகுக்கு பதிலாக ஓமம் போட்டு தாளித்தால், வாசனையாக இருக்கும்* மோர்க்குழம்பில் தேங்காயுடன் வதக்கிய பறங்கிக்காயை சேர்த்து அரைத்துவிட குழம்பு நீர்த்து போகாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !