டயானா என்னும் மந்திரச் சொல்!
பிரிட்டன் இளவரசி, டயானா, கார் விபத்தில் இறந்து, 20 ஆண்டு கடந்து விட்டது. ஆனாலும், அவரை அந்நாட்டு மக்களால் மறக்க முடியவில்லை.அவர் அணிந்த உடைகள், வாட்ச், பிரேஸ்லெட், நகை, திருமணத்தன்று, அவர் பயன்படுத்திய பொருட்கள், சிறு வயதில் அவர் எடுத்த புகைப்படங்கள் ஆகியவை, பிரிட்டனில், அவ்வப்போது, ஏலம் விடப்படுகின்றன.இவற்றை ஏலம் எடுப்பதற்கு, கடும் போட்டி நிலவுகிறது. டயானா பயன்படுத்திய வாட்ச் ஒன்று சமீபத்தில், பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.'மகாராணியாக, மாட மாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் வாழும் ஏழைகள் மீது, அவர் காட்டிய பரிவு தான், டயானாவை, மக்கள், இன்னும் மறக்காமல் இருப்பதற்கு காரணம்...' என்கின்றனர், பிரிட்டன் அரசியல்வாதிகள்.— ஜோல்னாபையன்.