இது என்ன தெரியுமா?
நம் வீடுகளில் பறந்து திரியும், ஈயின் தலை தான் இது. சாதாரண கேமராக்களால், இவ்வளவு துல்லியமாக படம்பிடிக்க முடியாது. இதற்காக, 'மாக்ரோ போட்டோகிராபி' கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மிகச்சிறிய பொருட்களை கூட, துல்லியமாக படம் எடுக்க முடியும். 'மாக்ரோ போட்டோகிராபி'க்கு, 'நிக்கான் டி 500' மற்றும் 'நிக்கான் 105 எம்.எம். லென்ஸ்' பயன்படுத்தப்படுகிறது. மேலும், 'குளோசப்' ஆக படம் கிடைப்பதற்கு, 'ரேய்நாக்ஸ் டி சி ஆர் 250' என்ற, 'மைக்ஸ்கோப்பிக்கல் லென்ஸ்'சும் கேமராவில் இணைக்கப்படுகிறது.—ஜோல்னாபையன்.