உள்ளூர் செய்திகள்

ஐஸ்கிரீம் சாப்பிட, பெண்களுக்கு தடை!

மத்திய கிழக்கு நாடான, துருக்கியில் உள்ளது, பக்சிலர் என்ற நகரம். இங்கு, மத பழமைவாதிகள் அதிகம் வசிக்கின்றனர். பெண்களுக்கு கட்டுப்பாடு அதிகம். சமீபத்தில், இந்த நகராட்சி நிர்வாகம் சார்பில், இளம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.அப்போது, 'பொது இடங்களில், இளம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பயணத்தின் போது, எப்படி அமர வேண்டும்...' என்றெல்லாம் பயிற்சி தரப்பட்டது.அதில், 'ஐஸ்கிரீமை, பெண்கள், நாக்கால் சாப்பிடக் கூடாது' என, விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தான், குறிப்பிடத்தக்க விஷயம்.'நாக்கால் சாப்பிடக் கூடாது என்றால், அதை எப்படி சாப்பிடுவது; நாக்கால் சாப்பிட்டால், என்ன பிரச்னை...' என, எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதுகுறித்து கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்கள், 'பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது...' எனக் கூறி, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !