இதப்படிங்க முதல்ல...
இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!முரளி நடித்த, மனுநீதி, வடிவேலு நடித்த, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர், நடிகர், தம்பி ராமைய்யா. இவர், தற்போது, தன் மகன் உமாபதி நாயகனாக நடித்து வரும், மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கி, இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக, கடந்த, ஐந்து மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை தம்பி ராமைய்யா. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, 'என் மனசுக்குள் நீ புகுந்து' என்று துவங்கும் பாடலை, இசையமைப்பாளரான டி.இமானை, பாட வைத்துள்ளார். — சினிமா பொன்னையாகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!சாமி-2 படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாவதற்கு முன், த்ரிஷா தான் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கீர்த்தி சுரேஷ் உள்ளே வந்ததும், அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு கதையில் முன்னுரிமை கொடுத்து, த்ரிஷாவின் கேரக்டரை, 'டம்மி' பண்ணி விட்டனர். இதன் காரணமாக, அந்த படத்தில் இருந்து வெளியேறினார் த்ரிஷா. இந்நிலையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான, நடிகையர் திலகம் படத்தில் நடித்த பின், இப்போது இன்னும் பெரிய நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். அதன் காரணமாக, த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்க பேசிக் கொண்டிருந்த ஒரு படம், தற்போது, கீர்த்தி சுரேஷ் பக்கம் திரும்பி நிற்கிறது. இதனால், இந்த நடிகை தன் மார்க்கெட்டை கவிழ்த்து விடுவார் என்று பயந்து போயிருக்கிறார் த்ரிஷா. புது வெள்ளம் வந்து, பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று!— எலீசாதமிழ் பேச பயிற்சி எடுக்கும் ரகுல்பிரீத் சிங்!'தமிழில் முன்னணி நடிகையாக வேண்டுமென்றால், தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். அதனால் தான் தற்போது, நான் தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்து வருவதோடு, தமிழ் கலாசாரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்...' என்கிறார், டில்லியில் பிறந்த, பஞ்சாபியான ரகுல்பிரீத் சிங். பாம்பு தின்கிற ஊருக்கு போனால், நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும்!— எலீசாதமன்னாவின் பிகினி சுற்று!தமன்னாவின் மார்க்கெட் இறங்கு முகம் கண்டபோதும் இன்னும் சில ஆண்டுகள் களத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால், தன் அபிமான இயக்குனர்களை நேரில் சந்தித்து படவேட்டை நடத்தும் தமன்னா, 'கதாநாயகி வேடம் இல்லையென்றால் அயிட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பாவது கொடுங்கள்...' என்று உரிமையோடு கேட்டு வருகிறார். அதோடு, தன் பிகினி ஆல்ப தரிசனத்தையும் அவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறார். கண்டதை கொண்டு கரை ஏற வேண்டும்!— எலீசாரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!ராஜ்கிரண் நடித்த, பவர்பாண்டி படத்தை இயக்கியவர் நடிகர் தனுஷ். அதையடுத்து தற்போது, நாகார்ஜுனாவை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தன் மாமனார் ரஜினியை வைத்தும் ஒரு படம் இயக்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ரஜினிக்காக ஒரு அதிரடியான அரசியல் கதையை தயார் செய்து, அதை, ரஜினியிடம் சொல்ல சரியான தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார். — சி.பொ., பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!கமல்ஹாசன், தசாவதாரம் படத்தில், 10 விதமான, 'கெட்டப்'புகளில் நடித்தார். அதையடுத்து இப்போது, மிர்ச்சி சிவா நடித்து வரும், தமிழ்ப்படம்--2 என்ற படத்தில், காமெடியன் சதீஷ், 10 வேடங்களில் நடிக்கிறார். கதைப்படி, இந்த படத்தில் காமெடி வில்லனாக நடிக்கும் அவர், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான, 'கெட்டப்'புகளில் வந்து, நாயகன் சிவாவை மிரட்டுகிறார். இந்த, 'கெட்டப்'புகளுக்காக தன், 'பாடி லாங்குவேஜை' மாற்றி, முதன் முறையாக அதிக, 'ரிஸ்க்' எடுத்து நடித்திருக்கிறார் சதீஷ். அதோடு, 'நான் காமெடியனாக நடித்த போது என்னைப் பார்த்து பெரிதாக சிரிக்காத ரசிகர்கள், இந்த படத்தில் என் வில்லன் நடிப்பைப் பார்த்து, சிரிக்கப் போகின்றனர்...' என்கிறார். — சினிமா பொன்னையாகறுப்பு பூனை!ரன் நடிகையின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் துவங்கியிருப்பதால், மீண்டும் வெயிட் குறைத்து கோலிவுட்டில் விஜயம் செய்து வருகிறார். அதோடு, தன் மாஜி ஹீரோக்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, வில்லி மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்க சிபாரிசு செய்யுமாறும் அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறார் நடிகை. சினி துளிகள்!* சிவகார்த்திகேயனின், சீமராஜா படத்தில், கிராமத்து வில்லியாக கலக்கியுள்ளார் சிம்ரன்.* செம படத்தில், நாயகியாக நடித்துள்ள அர்த்தனா, அதையடுத்து, பசங்க பாண்டிராஜ் இயக்கும், கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடிக்கிறார்.- அவ்ளோதான்!