இதப்படிங்க முதல்ல...
22 வருடங்களுக்கு பின், பிரபு - மோகன்லால்!கடந்த, 1996ல், பிரியதர்ஷன் இயக்கிய, காலா பாணி என்ற மலையாள படத்தில், பிரபு மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படம் தான் தமிழில், சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. அதையடுத்து தற்போது, பிரியதர்ஷன் இயக்கும், மரக்கார் அரபி கடலின்டே சிம்ஹம் என்ற மலையாள சரித்திர படத்தில், 22 ஆண்டுக்கு பின் மீண்டும் பிரபு, மோகன்லால் இணைந்து நடிக்கப் போகின்றனர். பிரியதர்ஷனின் கனவு படமான இதில், பெரும்பகுதி படப்பிடிப்பு கடலுக்குள்ளேயே நடைபெற உள்ளது. — சி.பொ.,கவர்ச்சி கொடியேற்றிய நாயகி!காற்றுவெளியிடை படத்தை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும், செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்து வருகிறார் அதிதி ராவ். 'நான் நடிக்கும் படங்களை அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து கண்டுகளிக்கவே ஆசைப்படுகிறேன். அதனால், கிளாமராக நடிக்க மாட்டேன்...' என்று முதலில் கூறி வந்த அதிதி ராவிற்கு, எதிர்பார்த்தபடி புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. விளைவு, தற்போது, தன் டூ-பீஸ் போட்டோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், கவர்ச்சியாக நடிக்க தயாராகி விட்டதாக, கமர்ஷியல் இயக்குனர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார். காலம் செய்த கோலத்துக்கு ஆரை வெறுப்பது? — எலீசாபிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!முன்னாள் உலக அழகியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த, தமிழன் படத்தில் அறிமுகமானார். அதன்பின், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகிய அவர், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக எழுதப்பட்டு வருகிறது. 'அன்பினிஷ்ட்' என்ற பெயரில் வெளியாகும் அந்த புத்தகத்தில் அவரது கதைகள், கட்டுரைகள், அவர் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் அதிகமாக இடம்பெற இருக்கிறது.— சி.பொ.,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜி.வி.பிரகாஷ்!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகனான, நடிகர் ஜி.வி.பிரகாஷ், ரஹ்மான் இசையில், 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, குச்சி குச்சி ராக்கம்மா...' போன்ற பாடல்களை குழந்தை குரலில் பாடியவர். இந்நிலையில், தற்போது தான் நாயகனாக நடித்து வரும், சர்வம் தாளம் மயம் படத்திற்காகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், 'பீட்டர் பேட்டா ஏது...' என்று துவங்கும் பாடலை பாடியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், 'ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி பாலிஸி...' என்ற பாடலைப் போன்று இந்த பாடலையும் தர லோக்கல் பாடலாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பதாக சொல்கிறார்.— சி.பொ.,கறுப்பு பூனை!சுள்ளான் நடிகரால் அரவணைக்கப்பட்டிருந்த அந்த பால் நடிகை, மீண்டும் அவரை நாடி வந்து, வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், நடிகரோ, 'மீண்டும் நாம் இணைந்து நடித்தால், என் குடும்பத்தில் புயல் அடிக்காது, சுனாமியே அடிக்கும்...' என்று சொல்லி, நடிகையை துரத்தியடித்து விட்டார்.சிவாஜி கேர்ள் நடிகை, ரஷ்யாவை சேர்ந்த பாய் பிரண்டை திருமணம் செய்த கையோடு மீண்டும் அரிதாரம் பூசி வருகிறார். அதோடு, இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியாவே இல்லை என்று கூறும் அவர், திருமணமான நடிகை என்று தன்னை யாரும் ஓரங்கட்டி விடக்கூடாது என்பதற்காக அந்த சுவடே தெரியாத அளவுக்கு, புதுவரவு நடிகையருடன் போட்டி போடும் அளவுக்கு, 'பிட்' துணிகளை அணிந்தபடி ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து, அதிர வைக்கிறார்.பப்ளிமாஸ் நடிகையின் மார்க்கெட் சரிந்து விட்டதால், தமிழ் சினிமா மீதான நம்பிக்கை அவருக்கு போய் விட்டது. அதோடு அவரை படங்களுக்கு, ஒப்பந்தம் பண்ணியவர்களும், புதுமுக நடிகைகளுக்கு கொடுப்பது போன்று சம்பளம் கொடுக்க, ரொம்பவே கடுப்பாகி விட்டார் நடிகை. அதனால், சென்னையில் தங்கினால், ஸ்டார் ஓட்டல்களுக்கு பில் கட்ட முடியாது என்பதால் மும்பைக்கே சென்று விட்டார், நடிகை. சினி துளிகள்!* தமிழில், ராட்சஸன், மலையாளத்தில், ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், அமலாபால்.* நரகாசூரன் படத்தில், கதாநாயகி அல்லாத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் ஸ்ரேயா.* துப்பாக்கி முனை என்ற படத்தில், விக்ரம் பிரபுவுடன் நடிக்கிறார், ஹன்சிகா.அவ்ளோதான்!