உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

9 வேடங்களில் ஜெயம் ரவி!நவராத்திரி படத்தில், சிவாஜி, ஒன்பது வேடத்திலும், தசாவதாரம் படத்தில், கமல், 10 வேடத்திலும் நடித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, தற்போது, ஜெயம்ரவியும், கோமாளி படத்தில், ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ராஜா வேடம், பிரிட்டீஷ் காலத்து அடிமை, ஆதிவாசி உள்ளிட்ட வேடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிவிட்ட நிலையில், மற்றவைகளை ரகசியமாக வைத்துள்ளனர். 'இந்த வேடங்களுக்காக, நடிப்புத்திறன் மட்டுமின்றி, என், உடல் அசைவுகளையும் முற்றிலுமாக மாற்றி நடித்துள்ளேன். ஒன்பது வேடங்களில் நடிக்க, சிவாஜி சாரும், கமல் சாரும் தான் எனக்கு, உதாரணமாக இருந்தனர்...' என்கிறார்,ஜெயம் ரவி.— சினிமா பொன்னையாயோகிபாபுவிற்கு கிடைத்த, அழகான தோழி!யோகிபாபுவுடன், 'டூயட்' பாட சில நடிகையர் தயங்கிய நிலையில், ஜாம்பி படத்தில் அவருடன் நடித்துள்ள, யாஷிகா ஆனந்த், எந்த தயக்கமும் இல்லாமல் நெருக்கமாக நடித்திருக்கிறார். அதோடு, 'யோகிபாபு, ஜாலியான மனிதர். அதனால், இந்த படத்தில் நடித்தபோது, அவரின் தோழியாகி விட்டேன். அவருடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொபைலில் கடலை போடுகிறேன். எங்களுக்கிடையே அப்படியொரு நட்பு ஏற்பட்டுள்ளது...' என்கிறார். அடி அதிசயமே, சீமைச் சரக்கே!— எலீசாநயன்தாரா கொடுத்த, 'சர்ப்ரைஸ்!'தன் காதலரான விக்னேஷ் சிவனுக்கு, அவ்வப்போது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்து, ஆச்சரியம் கொடுப்பார், நயன்தாரா. இந்நிலையில், ரஜினியுடன், தர்பார் படத்தில் நடிக்க மும்பை சென்றவர், ஒருநாள், காதலரை மும்பைக்கு அழைத்திருக்கிறார். அப்போது, ரஜினியை வைத்து, படம் இயக்க, 'கால்ஷீட்' வாங்கி விட்டதாக, காதலருக்கு மிகப்பெரிய, ஆச்சரியம் கொடுத்து அசத்தியிருக்கிறார். அதுவும், நயன்தாராவின் காதலர் என்பதால், கதையை கூட கேட்காமல், நடிக்க ஒத்துக்கொண்டாராம், ரஜினி. ஆக, ரஜினியே அசந்து போகும் வகையில், அசத்தி விடவேண்டும் என்று, கதை தயார் செய்து கொண்டிருக்கிறார், விக்னேஷ் சிவன். துாண்டில் போட்டு, ஆனை பிடிக்கும் புத்திசாலி!— எலீசாவிஜய் - விக்ரமுடன் இணையும், ஷங்கர்!ரஜினி நடித்த, 2.0 படத்தை அடுத்து, 22 ஆண்டுகளுக்கு முன், கமலை வைத்து இயக்கிய, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை, மீண்டும் அவரை வைத்தே படமாக்க களமிறங்கினார் இயக்குனர், ஷங்கர். ஆனால், அரசியல் வேலைகளில், கமல், 'பிசி'யாக இருப்பதால், படம் துவங்கியதில் இருந்தே ஏகப்பட்ட தடைகள். அதனால், இப்போதைக்கு, இந்தியன் - 2 படத்தை கிடப்பில் போட்டு, விஜய் - விக்ரமை இணைத்து, இரட்டை கதாநாயகன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* தளபதி நடிக்கும் படங்களின் கதை, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதனால், பலமுறை கோர்ட் படி ஏறிய அவர், தற்போது நடித்து வரும் படத்தின் கதையும், சர்ச்சையில் சிக்கியிருப்பதால், இயக்குனர் மீது அதிருப்தியடைந்துள்ளார். அதோடு, 'இந்த பிரச்னையை வளரவிட வேண்டாம். கதைக்கு உரிமை கோரும் நபரை அழைத்து, அவருக்கு ஒரு தொகையை கொடுத்து, சமரசம் செய்து முடித்து விடுங்கள். அதன்பின், படப்பிடிப்பை நடத்தலாம்...' என்று, தொடர்ந்து படத்தில் நடிக்க மறுத்து, இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார். இதனால், கதைக்கு உரிமை கோரும் நபரை அழைத்து, சமரசம் செய்து வருகிறார், மேற்படி பட இயக்குனர்.'டேய் மச்சான்... உன்னோட சொந்த, 'பைக்' என்னாச்சுடா? எப்பப் பாரு, யார்கிட்டயாவது, வண்டியை கடன் வாங்கிட்டு பந்தாவா வந்துடறே... அப்புறம், வண்டியோட ஓனர், அது உடைஞ்சுருச்சு... இது உடைஞ்சுருச்சுன்னு, நம்மகிட்டேயிருந்து பணத்தை கறந்துடறான். இதனால், நம் நண்பன், விஜய் கோவிச்சுக்கிறாண்டா... சொந்த வண்டி இருந்தால் தான், உன்னோட சேர்வானாம்... சொல்ல சொன்னாண்டா...' என்றான், சக தோழன்.* 'பாய்ஸ்' நடிகருக்கு மார்க்கெட் சரிந்து கிடப்பதால், இணைய பக்கத்தில் ஏதாவது சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு, பெயரளவில் பரபரப்பு கூட்டி வருகிறார். சில சமயங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களை நடிகர் பதிவிட, அவருக்கு கொலை மிரட்டல், மர்ம அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். இதனால், அதிர்ந்து போன நடிகர், அடிக்கடி மொபைல் எண்ணை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.'டேய் சித்தார்த்... யாரோ, என்னவோ பேசிட்டிருந்தா, உனக்கென்னடா வந்தது... நீ எதுக்கு குறுக்கே புகுந்து, கருத்து சொல்லிட்டிருக்கே... பாரு, உன்னால், எனக்கும் கெட்ட பேர் வந்துடுச்சு...' என்றான், நண்பன்.சினி துளிகள்!* காபி என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், வாகை சூடவா, இனியா.* சசி இயக்கும், சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில், ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கிறார், சித்தார்த்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !