இதப்படிங்க முதல்ல...
மிரட்டல் விடுத்த, அஜீத் ரசிகர்கள்!அஜீத் நடிக்கும் படங்கள் பற்றி வெளியாகும் செய்திகளை, 'சோஷியல் மீடியா'வில், 'டிரன்டிங்' செய்வதை வழக்கமாக வைத்துள்ள, அவரது ரசிகர்கள், தற்போது, வலிமை படம் குறித்த எந்த, 'அப்டேட்'டையும் படக்குழு வெளியிடாததால், 'டென்ஷன்' ஆகி விட்டனர். அதையடுத்து, மதுரையிலுள்ள, அஜீத் ரசிகர்கள், 'வலிமை, 'அப்டேட்' வெளியிடு; இல்லைன்னா, 'பர்ஸ்ட் லுக் போஸ்டரை' வெளியிடு...' -என்ற வாசகத்துடன், 'போஸ்டர்'களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இப்படி, அஜீத்தின் ரசிகர்கள், மிரட்டும் தொனியில், 'போஸ்டர்' வெளியிட்டிருப்பது, வலிமை படக்குழுவை அதிர வைத்துள்ளது.— சினிமா பொன்னையா காக்கா முட்டை நடிகையை, வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!'ஹிந்தி தெரியாது போடா' -என்று, 'டீ - சர்ட்' அணிந்து, ஹிந்திக்கு, எதிர்ப்பு தெரிவித்த நடிகையரில், காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். ஆனால், அதையடுத்து இவர் ஒரு ஹிந்தி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஹிந்தியில் சரளமாக பேசும் வீடியோ, 'சோஷியல் மீடியா'வில் வைரலானது. அதைப்பார்த்த ரசிகர்கள், பொங்கி எழுந்து விட்டனர். 'ஹிந்தி தெரியாது போடான்னு சொல்லிட்டு, என்னமா ஹிந்தி பேசுறீங்கம்மா...' -என்று, ஆளாளுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷை, கடுமையான வார்த்தைகளால், வச்சு செஞ்சு வருகின்றனர். ஆடிக்கு அடைப்பட்டவளே, அமாவாசைக்கு வெளிப்பட்டவளே!- எலீசாபூஜாகுமாருக்கு பெருந்தீனி போடும், இயக்குனர்கள்!பார்பிட்டன் லவ் -என்ற ஹிந்தி படத்தில், 43 வயதிலும், படுக்கையறை காட்சிகளில் நடித்து, பாலிவுட்டில் பரபரப்பு தீயை கொளுத்திப் போட்டுள்ளார், விஸ்வரூபம் நடிகை, பூஜாகுமார். அதே வேகத்தில் கோலிவுட்டிலும் விவகாரமான வேடங்களில் நடிக்க, வரிந்து கட்டி நிற்கிறார். இதையடுத்து, அம்மணி, படுக்கையறை காட்சி என்று வந்து விட்டால், சகட்டுமேனிக்கு புகுந்து விளையாடக்கூடியவர் என்பதால், அவரது நடிப்பு பசிக்கு பெருந்தீனி போட்டு விட, சில கோலிவுட் இயக்குனர்கள் கோதாவில் குதித்துள்ளனர். ஆக, கோலிவுட்டுக்கு ஒரு, 'பவர்புல் செக்ஸ்பாம்' கிடைத்து விட்டார். ஆகாச வல்லிடி அதிர இடித்தது!- எலீசாதனுஷை முற்றுகையிட்ட, நாவலாசிரியர்கள்!வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த, அசுரன் படம், பூமணி எழுதிய, 'வெட்கை' என்ற நாவலைத் தழுவி உருவானது. அப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தனுஷை, சில நாவலாசிரியர்கள் சந்தித்து, தங்கள் கதைகளிலும் நடித்து, உயிர் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு, 'நாவல் கதைகளில் தொடர்ந்து நடிக்க முடியாது. எப்போதாவது நடித்தால் தான் ரசிப்பர். அதனால், அடுத்து நாவல் கதையில் நடிக்க எனக்கு தோன்றுகிறபோது, உங்களை அழைக்கிறேன்...' என்று சொல்லி, அனுப்பி விட்டார், தனுஷ்.— சினிமா பொன்னையா கறுப்புப்பூனை!கேப்டன் நடிகரின் வாரிசு நடித்த படங்கள் எதுவும் ஓடாத நிலையில், கடைசியாக அவர் நடித்து வந்த படமும் இழுபறியில் கிடக்கிறது. இந்நிலையில், தளபதி நடிகரை தொடர்பு கொண்டு, மகனுக்கு கை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார், கேப்டன். ஆனபோதும், தளபதி தரப்பில் இருந்து எந்த, 'ரியாக் ஷனும்' இல்லை.'ஒரு காலத்தில், தளபதி வளருவதற்காக நான் கை கொடுத்தேன். ஆனால், என் மகனை வளர்த்து விட, தளபதிக்கு மனம் இல்லையே...' என்று, தன் அபிமானிகளிடம் சொல்லி புலம்பியுள்ளார், கேப்டன் நடிகர்.'டேய், சண்முகப்பாண்டி... நீ சொந்தமா, 'பிசினஸ்' ஆரம்பிக்கிறது சம்பந்தமா, வங்கி மேனேஜர், ஜோசப் விஜயை போய் பார்க்கச் சொன்னேனே... பார்த்தியா?''நான் பலமுறை சந்திச்சு... என்னோட திட்டத்தைப் பற்றி தெளிவா சொல்லிட்டேன்பா... ஆனா, அவரு கண்டுக்கவே இல்லை...''ஒரு காலத்துல, அவன் வேலைக்காக, அவனோட அப்பா என்னிடம் சிபாரிசுக்கு வந்தபோது, உடனே செய்து கொடுத்தேன். இன்று பெரிய ஆளாயிட்டதாலே கண்டுக்க மாட்டேன்கிறான். இருக்கட்டும், கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறேன்...' என மகனிடம் கூறினார், அப்பா.சினி துளிகள்!* 'விஜயகாந்த் பாணியில், 'ஆக் ஷன் ஹீரோ'வாக உருவெடுப்பதே என் நோக்கம்...' என்கிறார் அவரது மகன், சண்முகப்பாண்டியன்.அவ்ளோதான்!