இதப்படிங்க முதல்ல...
'ரிஸ்க்' எடுக்கும், சிவகார்த்திகேயன்!சினிமாவில், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, சில படங்களை தானே தயாரித்து நடித்தார், சிவகார்த்திகேயன். அதுபோல், 'ஆக் ஷன்' கதைகளில் நடித்து முன்னணி, 'ஹீரோ'வாக வேண்டும் என்பதற்காக, காக்கி சட்டை படத்தில், நடித்தார். ஆனால், அந்த படம் தோல்வி அடைந்தது.இருப்பினும், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்தில், மீண்டும், 'ஆக் ஷன் ஹீரோ'வாக உருவெடுக்க போகிறார். அத்துடன், இந்த படத்திற்காக, முதல் முறையாக தன், 'கெட் - அப்'பையும் மாற்றும், சிவகார்த்திகேயன், 'ஆக் ஷன்' காட்சிகளில் கூடுதல், 'ரிஸ்க்' எடுத்து நடிப்பதற்கும் தன்னை தயார்படுத்தி வருகிறார்.— சினிமா பொன்னையாவிஜயை துரத்தும், கீர்த்தி சுரேஷ்!விஜய்க்கு ஜோடியாக, பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்தவர், கீர்த்தி சுரேஷ். அதையடுத்து, விஜயுடன் ஜோடி சேருவதற்காக, தொடர்ந்து கல் எறிந்த போதும், அவரை கண்டு கொள்ளவில்லை, விஜய். இருப்பினும், விஜய் நடிக்கும் படங்களை பார்த்துவிட்டு, கருத்து சொல்லும் முதல் ரசிகையாக இருந்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.'விஜய், உங்களை இப்படி கைவிட்டு விட்டாரே...' என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டால், 'விஜய், என்னை ஒருபோதும் கைவிட மாட்டார். அதோடு நடிப்பு வேறு, நட்பு வேறு. எங்களுக்கு இடையிலான நட்பு ரொம்ப இறுக்கமானது. அதனால், விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவரது தோழியாக நீடிப்பது கூட எனக்கு மகிழ்ச்சி தான்...' என்கிறார்.— எலீசாலோகேஷ் கனகராஜின், புதிய அவதாரம்!விஜய் நடித்த, மாஸ்டர், கமல் நடித்த, விக்ரம் போன்ற படங்களை இயக்கிய, லோகேஷ் கனகராஜ், தற்போது, விஜயை வைத்து, லியோ படத்தை இயக்கி வருகிறார்.இந்த நேரத்தில், ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும், சிங்கப்பூர் சலுான் என்ற படத்தில், முக்கிய வேடத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். இதன் காரணமாக, அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வைப்பதற்காக, அவரிடம் படையெடுத்து வருகின்றனர், சில இயக்குனர்கள்.ஏற்கனவே, சமுத்திரக்கனி, மிஷ்கின், கவுதம் மேனன், பிரதீப் ரங்கநாதன் என, பல இயக்குனர்கள் முழு நேர நடிகர்களாகி விட்டனர். அதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜும் அதே பாணியில் படம் இயக்குவதை குறைத்து, நடிப்பில் கூடுதல் ஆர்வம் காட்ட துவங்கி விடுவாரோ என்று, அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும், 'மெகா ஹீரோ'கள், பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!சார்பட்டா நடிகரின் இல்லத்தரசி, வம்பு நடிகர் நடித்து வெளியான, கேங்ஸ்டர் படத்தில், ஒரு பாட்டுக்கு, செம குத்தாட்டம் போட்டிருந்தார். ஆனால், படு கவர்ச்சியாக அவர் ஆடி அமர்க்களப்படுத்தியத்தைப் பார்த்த, சார்பட்டா நடிகரின் நட்பு வட்டார, 'ஹீரோ'கள், 'திருமணத்திற்கு பிறகு, ஆத்துக்கார அம்மணியை இப்படியா குத்து பாட்டுக்கு ஆட விடுவது...' என்று, கிண்டல் அடித்துள்ளனர்.இதையடுத்து, 'இனிமேல், இதுபோன்று குத்தாட்டம் ஆட வேண்டாம்...' என்று, ஆத்துக்கார அம்மணிக்கு, தடை போட்டிருக்கிறார், சார்பட்டா நடிகர். ஆனால், அம்மணியோ, 'முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? இனிமேலும், இதே போன்று தான் தொடர்ந்து நடிக்கப் போகிறேன். என் கலைச்சேவைக்கு தடை போடுவதற்கு, கணவருக்கு கூட உரிமை இல்லை...' என்று, குரலை உசத்தி பேசியிருக்கிறார்.இதன் காரணமாக, இந்த குத்தாட்ட விவகாரம், சார்பட்டா நடிகரின் வீட்டில், தற்போது திடீர் புகைச்சலை உருவாக்கி இருக்கிறது.சினி துளிகள்!* சார்பட்டா பரம்பரை, 'ஹிட்'டுக்கு பிறகு, ஆர்யா நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில், தற்போது, முத்தையா இயக்கத்தில் நடித்து வரும், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை, பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.* சமந்தாவை விவாகரத்து செய்துள்ள, தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, சோபிதா துலிபாலா என்ற தெலுங்கு நடிகையுடன், 'டேட்டிங்' செய்து வருகிறார். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஜாலியாக சுற்றித் திரிகின்றனர்.* பத்து தல படத்தில், ஆர்யாவின் மனைவி, சாயிஷா ஆடிய குத்தாட்டம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், அடுத்தடுத்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டிலிருந்து அவருக்கு குத்தாட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.* திருமணத்திற்கு பிறகு, மீண்டும் சினிமாவில், 'ரீ - என்ட்ரி' ஆகியுள்ள, மீரா ஜாஸ்மின், தன், 41வது வயதில், குயின் எலிசபெத் என்ற படத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.அவ்ளோதான்!