உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

வினு சக்ரவர்த்தி கொதிப்பு!சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள, த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை பார்த்து, கொதிப்படைந்துள்ளார், நடிகர் வினு சக்ரவர்த்தி. 'இது, சில்க்கின் வாழ்க்கை படமே அல்ல. வெறும் கவர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கின்றனர்; ஆனால், அவர் வாழ்க்கை வலி நிறைந்தது. அதனால், விரைவில், 'சில்க்' என்ற பெயரில், சில்க் ஸ்மிதாவின் உண்மை கதையை, நானே படமாக்கப் போகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையா.

பாலா இயக்கும் சென்டிமென்ட் படம்!பாலா இயக்கும், எரியும் தணல் படம், மகனை படிக்க வைத்து ஆளாக்க கஷ்டப்படும், ஒரு பெற்றோரை பற்றிய கதை. மொத்த கதையும் அந்த அப்பா - அம்மா கேரக்டர் மீதே செல்வதால், அந்த வேடங்களுக்கு பொருத்தமானவர்களை தமிழ், மலையாள சினிமா உலகில் தேடுகிறார் பாலா. மகன் கேரக்டருக்கு, அதர்வா என்பது உறுதியாகி விட்டது.— சி.பொ.,

யோகா டீச்சர் நமீதா!தமிழ் சினிமா கைவிரித்த நேரம், நமீதாவுக்கு கைகொடுத்து ஆதரித்தது, தெலுங்கு சினிமா. அதனால், ஆந்திராவிலேயே தற்போது மையம் கொண்டுள்ள நமீதா, லவ் காலேஜ் என்றொரு படத்தில், யோகா டீச்சராக நடித்து வருகிறார். இப்படத்துக்காக, யோகா பயிற்சி செய்யும் கவர்ச்சி புகைப்படங்கள், தற்போது, ஆந்திராவை கலக்கிக் கொண்டிருக்கிறது. நடல புடலங்காய் காய்க்கிறதாம்; நாழிக்கு பத்தெட்டு விற்கிறாளாம்!— எலீசா.

எமி ஜாக்சனுக்கு ஏமாற்றம்!தெய்வத்திருமகள் படத்தை பார்த்ததில் இருந்து, விக்ரமின் தீவிர ரசிகையாகி விட்டார், மதராசப்பட்டினம் எமி ஜாக்சன். அதனால், தாண்டவம் படத்தில் நடிக்க இயக்குனர் விஜய், 'கால்ஷீட்' கேட்டதும், மறுபேச்சின்றி கொடுத்துள்ளார் எமி. ஆனால், தற்போது, தெலுங்கு ஜெகபதி பாபுவையும், விக்ரமுடன் நடிக்க வைத்துள்ள விஜய், எமி ஜாக்சனை, ஜெகபதி பாபுவுக்கு ஜோடியாக்கி விட்டார். இதனால், விக்ரமுடன் டூயட் பாட முடியாமல் போனதை எண்ணி, மனதளவில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நினைத்ததும், கறி சமைத்ததும்!— எலீசா.

ஹன்சிகா அரசியல் பிரவேசம்!அரசியல் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்துள்ளார், ஹன்சிகா மோத்வானி. காரணம், அரசியல் மீது சிறுவயதிலிருந்தே ஹன்சிகாவுக்கு ஈடுபாடு அதிகம். அப்படியென்றால், அடுத்தக்கட்டமாக சினிமாவில் இருந்து, அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் உள்ளதா என்று அவரைக் கேட்டால், 'இதுவரை அந்த மாதிரி ஐடியா ஏதும் இல்லை; ஆனால், எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...' என்கிறார். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!— எலீசா.

இயக்குனராகும் கார்த்திக்!தன் மகன் கவுதமை, மணிரத்னம் படத்தில் அறிமுகம் செய்யவிருக் கிறார் கார்த்திக். இந்நிலையில், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் ஓய்ந்திருக்கும் அவருக்கும், படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், தன் மகனை வைத்து, தானும் ஒரு படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.— சி.பொ.,

மலையாள படத்தை வாங்கிய வில்லன்!தெலுங்கில் வெற்றி பெற்ற, ஹேப்பி டேஸ் பட உரிமையை வாங்கி, இனிது இனிது என்ற பெயரில், ரீ-மேக் செய்தார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில், தற்போது, மலையாளத்தில் வெளியான, சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தின் தமிழ் உரிமத்தையும் வாங்கியுள்ளார். தற்போது இயக்கி, நடித்து வரும், டோனி படம் வெளியானதும், அப்படத்தையும் தானே இயக்கி, நடிக்க இருக்கிறார்.— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !