உள்ளூர் செய்திகள்

ஹாரிபாட்டர்!

பிரபல ஆங்கில மாய வித்தை கதை எழுத்தாளர், ஜே.கே.ரவுலிங் எழுதிய, 'ஹாரிபாட்டர்' சீரியல் கதைகள், குழந்தைகளிடம் மட்டுமல்ல, பெரியவர்களிடமும் ரொம்ப பிரபலம். இவை, எழுத்தாளரை சாதாரண நிலையிலிருந்து, கோடீஸ்வரராக்கியது!தற்போது, 'ஹாரிபாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்ட்' என்ற பெயரில், ஒரு நாடகம் தயாராகி வருகிறது. இதை, த்ரானே, ஜே.கே.ரவுலிங் மற்றும் ஜான்டிப்பனி ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர்.இதில், ஹாரிபாட்டர் பெரியவனாகி, 19 ஆண்டுகள் கழித்து, ஒரு மந்திர, தந்திர அமைச்சரவை இலாக்காவில் பணிபுரிகிறான். அவனுடைய, மூன்று குழந்தைகளும் பில்லி சூன்யம், மாய தந்திரங்கள் மற்றும் வியக்கத்தக்க திறமைகளை போதிக்கும், 'ஹாக்வார்ட்ஸ்' பள்ளியில் படிக்கின்றனர். அந்த மூவரில், ஒரு குழந்தை அவற்றால் பாதிக்கப்படுகிறது. பின், என்ன நடக்கிறது என்பது தான் நாடகத்தின் முடிவு. இந்நாடகம் வெளிவந்தால், அது, ஜே.கே.ரவுலிங்கிற்கு மற்றொரு முக்கிய ஆரம்பமாக இருக்கும்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !