உள்ளூர் செய்திகள்

ஜாலி பேர்வழி ஹெப்னர்!

பிரபல, 'பிளேபாய்' பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியருமான, ஹியூ ஹெப்னர், தன், 91வது வயதில் அமெரிக்காவில் இறந்தபோது, அப்பத்திரிகை வாசகர்களுக்கும், பல பிரபலங்களுக்கும் பேரிழப்பாக இருந்தது. 1953ல், 'பிளே பாய்' பத்திரிகையை ஆரம்பித்த இவர், அட்டையில், ஹாலிவுட் கவர்ச்சி கன்னி, மர்லின் மன்றோவின், நிர்வாண படத்தைப் போட்டு அசத்தினார். பின், 2015 வரை, பல பிரபலங்களின் நிர்வாண படங்களைப் போட்டு, மேலும், அவர்களை பிரபலமாக்கினார்.இவரது எழுத்தில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் ஒளிவு மறைவு இல்லை; ஏராளமான காதலிகளுடன் ஜாலியாக வாழ்ந்த இவர், பல, இரவு நடன விடுதிகளையும் நடத்தி வந்தார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !