கவிதைச்சோலை - லட்சிய நாயகன்!
ஜூலை 27 அப்துல் கலாம் நினைவு தினம்வாழ்வில் எளிமையும்கையில் துாய்மையும்கொண்டவர்!பேச்சில் இனிமையும்செயலில் நேர்மையும்உடையவர்!அறிவில் கூர்மையும்லட்சியத்தில் வலிமையும்கொண்ட மகான்!உலக அரங்கில் குனிந்த இந்தியாவைநிமிரச் செய்தவர்!ஏவுகணையால்உலகை ஆச்சரியத்தில்மூழ்கடித்த இந்திய நாயகன்!இளைஞர் இதயங்களில்நம்பிக்கை விதைகளை துாவிகனவு காண சொன்னவர்!பேச்சிலும் எழுத்திலும்செயலிலும் இந்தியாவிற்குவலிமை ஊட்டியவர்!பொதுநல நோக்கில்தன்னலம் மறந்ததியாகச் செம்மல்!வாழ்வோருக்குவாழ்வியல் பாடத்தைவைத்துப் போன ஆசான்!பதவிக்கு ஆசைப்படாதவரைபதவி ஆசை கொண்டதில்ஜனாதிபதியானார்!பணங்களை நோக்காமல்மனங்களை நேசித்தஅன்பின் ஆலயம்!அரசுப் பள்ளியில் பயின்றுஅரசை வல்லரசாக்கியலட்சிய நாயகன்!காலங்களின் கைகளில்என்றென்றும் தவழும்ஞானக் குழந்தை!காலந்தோறும் வரலாறுகளேபடிக்கத் துடிக்கும்அரிய பொக்கிஷம்!மரித்தும் மனங்களில்வசிக்கும் வசீகரன்பிரிக்க முடியாத பிரியம்!— சங்கீதா சுரேஷ், தருமபுரி.