உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - இப்போது துவங்கினாலும்...

பொறுமையாக சென்றாலும் கூடஉண்மையே வெற்றி பெறும்!உங்களுக்கான அடையாளம்நீங்கள் நீங்களாகவேஇருப்பது தான்...உங்களுக்கான முத்திரைநீங்கள் செய்யும்நல்ல செயல்களே!செதுக்குங்கள்அறிவைப் பயன்படுத்திவாழ்க்கைக்கானதிட்டங்களையும்...உழைப்பை பயன்படுத்திவாழ்க்கையையும்!முயற்சி செய்துதோல்வியடைந்தாலும்வெற்றி தான்!பயணிப்பதற்காகவே பாதைகள் பார்த்துக் கொண்டேஇருப்பதற்காக அல்ல!முயற்சியோ, திட்டமோநல்லதாக இருப்பின்என்றுமே தோல்வியடையாது!திட்டங்களோ, செயல்களோமற்றவர்களுக்கும்பயனுள்ளதாக இருப்பின்அவை உங்கள் வாழ்வைநிமிரச் செய்யும்!கடந்த நாட்களை எண்ணிகவலை கொள்வதில்பயன் ஏதும் இல்லைஇருக்கும் நாட்கள் எல்லாம்உங்களுக்கானவையே!எதுவும் கை மீறிப்போய் விடவில்லைமுயற்சிகளை இப்போதுதுவங்கினாலும்விரைவில் வெற்றிஉங்கள் கைகளில் தவழும்!— மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !