உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பூஜித்து போற்றுவோம்!

ஏப்ரல் 22, பூமி தினம்அதிசயமாய்விடிந்துவிட்ட நாளிதுவோஇல்லைஅகிலம் வியக்கஅற்புதமாய் பிறந்துவிட்ட நாளிது!அஷ்டமியில்அடித்தளமிட்ட நாளிதுவோஇல்லைஇஷ்டமாய் இணைந்துஇன்ப மணம் பரப்ப வந்த நாளிது!ஆச்சர்யத்தைஅர்ப்பணித்த நாளிதுவோஇல்லைஅற்புதம் நிகழ்த்திஆனந்தத்தை அளிக்க வந்த நாளிது!வியப்பைவிருந்தாக்கிய நாளிதுவோஇல்லைவிதியை மாற்றிமதியால் வெல்ல வந்த நாளிது!வேடிக்கையில் வித்தை காட்டும் நாளிதுவோஇல்லைவிஷமம் விழுங்கிவெற்றி அளிக்க வந்த நாளிது!புதுமையில்புரட்சி செய்த நாளிதுவோஇல்லைபுதையிருள் விலக்கிபொலிவேற்ற வந்த நாளிது!சரித்திரத்தில்சாதனை செய்த நாளிதுவோஇல்லைதரித்திரத்தை துரத்திதரணி செழிக்க வந்த நாளிது!உன்னதமாய் உதித்து வரும்ஒவ்வொரு விடியலும்இனிபுன்னகையில் பூத்து சிந்திபொன்னான நாட்களாய் புழங்கபூஜித்து போற்றுவோம்பூமித்தாயை என்றென்றும்!க. அழகர்சாமி, கொச்சி, கேரளா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !