கவிதைச்சோலை - தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!
லட்சியத்தை அடையஅனுபவங்கள் அவசியமில்லைதன்னம்பிக்கை உணர்வோடுதொடரும் விடாமுயற்சியும்தடைப்படாத பயிற்சியும்இலக்கை எளிதாகதொட வைக்கும்!உச்சத்தில் கொடி கட்டி பறக்கசிறகுகள் தேவையில்லைநுணுக்கமான அறிவும்நுாதன சிந்தனையும்நினைப்பதை முழுமையாகநிறைவேற்றி வைக்கும்!வாழ்க்கையில் வசந்தம் வீசதென்றல் காற்று தேவையில்லைமன கசப்புகளை குழி தோண்டிமண்ணுக்குள் புதைத்துகள்ள கபடமில்லாதஉள்ளத்தோடு பேசகவலைகள் யாவும்தானாக கரைந்துஇனிமையான வாழ்க்கை உதயமாகும்!சமூகத்தில் சுமூகமானமாற்றத்தை கொண்டு வரபோராட்டங்கள் அவசியமில்லைசிந்தனைக்கு உயிர் கொடுத்துசெயலில் வேகம் காட்டசாதிக்கும் வல்லமை அதிகரிக்கும்!கொடியவனை வீழ்த்தஆயுதங்கள் தேவையில்லைகோபத்தை கட்டுக்குள் வைத்துபொறுமையோடு பயணித்தால்எதிரி நம் காலடியில் வீழ்வான்!நல்ல மனிதன் என்று பெயரெடுக்கவிளம்பரங்கள் அவசியமில்லைகர்மத்தை விட்டொழித்துதர்ம சிந்தனையை வளர்த்தால்தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!— எல். மூர்த்தி, கோவை.