உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுக்கும் ஆண்கள்!

ஜாதி, மத வேற்றுமையை கடந்து, மணமகளை தேடும் வாலிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரள எல்லை பிரதேசங்களில் வாழும் வாலிபர்கள் தான், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பெண்களை மணந்து கொள்ள விரும்புகின்றனர். இதற்கு காரணம், கேரள பெண்கள், அரசு வேலை, அதிக சம்பளம் என்று, உயர்ந்த நிலையில் உள்ள மணமகன்களையே தேடுவதால், பல வாலிபர்களும் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதையடுத்து, பெண் வீட்டாருக்கு பண உதவி அளித்து, அப்பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். படத்தில் இருப்பவர், கேரள மாநிலம், காசர்கோடை சேர்ந்த, சுரேஷ். கர்நாடக மாநிலம், பீச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த, மஞ்சுவை மணந்து, ஒரு குழந்தையும் உள்ளது. - ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !