மொபைல் போன் ஸ்டாண்ட்!
'உங்களிடம் எத்தனை மொபைல் போன் இருக்கு?' என்று கேட்டால், அதிகபட்சம் மூன்றை காட்டுவோம். ஆனால், ஜப்பானில் பலர், எக்கச்சக்கமான போன் வைத்து, அதற்கென ஒரு, 'ஸ்டாண்டை'யும் தயாரித்து, இடுப்பில் அலகு குத்தியது போல் மாட்டியபடி திரிய ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவில், ஒரு மொபைல் போன் வைத்துள்ளோர் செய்யும் அலப்பரையே தாங்க முடியலை. இதில், 10 மொபைல் போன் என்றால்...— ஜோல்னாபையன்.