உள்ளூர் செய்திகள்

கன்னியாஸ்திரியின் சேவை!

கடந்த, 24 ஆண்டுகளாக திகார் சிறையில் இருக்கிறார், ஏஞ்சல் என்ற கன்னியாஸ்திரி. குற்றவாளியாக அல்ல... கைதிகளுக்கு நல்ல சிந்தனைகள் கற்றுத் தருகிறார். மத போதகராக இல்லாமல், ஒழுக்கமான வாழ்க்கையில் ஈடுபட என்னென்ன செய்ய வேண்டும் என, கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். சில கைதிகள் குற்றம் செய்யாமலேயே தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் எப்படி சிறையில் இருந்து வெளியே வருவது என்றும், வசதி இல்லாதவர்களுக்கான இலவச சட்ட உதவிகள் செய்து, விடுதலை பெற வைக்கிறார், இந்த கன்னியாஸ்திரி. 'ஆரம்பத்தில் கைதிகளைப் பார்க்கும் போது பயமாக இருந்தது. ஆனால், இன்று அவர்கள் நண்பர்களாகி விட்டனர்...' என்கிறார், ஏஞ்சல். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !