உள்ளூர் செய்திகள்

திண்ணை!

காந்திஜி, தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது, நிகழ்ந்த சம்பவம் இது... காந்திஜியின் ஜெர்மானிய நண்பர், கேலன்பாச், குண்டுகள் நிரம்பிய கைத் துப்பாக்கி ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார்.ஒருநாள், அவரிடம், 'இதை ஏன் அனாவசியமாகச் சுமந்து கொண்டிருக்கிறீர்?' என்று கேட்டார், காந்திஜி.'சகோதரரே... தங்களை ஆபத்து சூழ்ந்துள்ளது; சில முரட்டு வெள்ளையர்கள் தங்களைத் தாக்க திட்டமிட்டுள்ளனர்...' என்றார், கேலன்பாச்.'அப்படியென்றால், நீங்கள் என்னைக் காப்பாற்ற அக்கறை கொண்டிருக்கிறீர்கள்... அப்படித் தானே...' என்றார், காந்திஜி. 'ஆமாம்...' என்றார் நண்பர்.'நல்லது... என்னைப் பாதுகாக்கிற கவலை இனி கடவுளுக்கு இல்லை; நீங்கள் தான் கடவுளின் இடத்துக்கு வந்து விட்டீர்களே...' என்று நகைச்சுவையாக கூறினார் காந்திஜி; சிரித்தார், நண்பர்.ஒருமுறை காந்திஜியிடம், 'நீங்களும், உங்கள் பெற்றோரும் காட்டில் சென்று கொண்டிருக்கிறீர்கள்... அப்போது, சிங்கம் ஒன்று வந்தால் என்ன செய்வீர்...' என்று கேட்டார், கோபால கிருஷ்ண கோகலே. 'முதலில் சிங்கத்துக்கு நான் இரையாவேன்; அதனால், என் பெற்றோர் பிழைத்துக் கொள்வர் அல்லவா...' என்றார், அமைதியாக காந்திஜி!பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை விழா ஒன்றில், சிவாஜி கணேசன் கலந்து கொண்டபோது பேசியது: ரயில்வேக்கும், என் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விழுப்புரத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தார், என் தாத்தா. நாகப்பட்டினத்தில் ரயில்வே ஊழியராக இருந்தார், என் தந்தை. பொன்மலை ரயில்வே, 'ஒர்க் ஷாப்'பில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர், என் சித்தப்பா. மேலும், என் மூத்த சகோதரரும், கொஞ்ச காலம் ரயில்வேயில் வேலை பார்த்திருக்கிறார். விட்ட குறை தொட்ட குறையாக, நானும், பச்சை விளக்கு திரைப்படத்தில், ரயில் இன்ஜின் டிரைவராக நடித்து விட்டேன்!'இவர் தாம் பெரியார்' என்னும் நூலிலிருந்து: அக்., 1929ல் நெல்லுாரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பிராமணர்களையும் நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார், ஈ.வெ.ரா.,பின், 1939ல் நீதிக்கட்சி தலைவரானதும், சென்னை, திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு கூட்டத்தில், ஈ.வெ.ரா., பேசியதாவது:என் பார்ப்பன நண்பர்களுக்கு சொல்லி கொள்கிறேன்... காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை ஒழிக்க, ஒத்துழைக்க வேண்டும். 'நாங்கள் பார்ப்பன துவேஷிகள்...' என, நீங்கள் கருதினால், உண்மையில் ஏமாந்து போவீர்கள். ஜஸ்டிஸ் கட்சியில் விகிதாச்சாரப்படி உங்களுக்கான பாகத்தைப் பிரித்துக் கொடுக்க சித்தமாயிருக்கிறோம். தாராளமாக வந்து சேருங்கள்; இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவீர்களேயானால் ஏமாற்றம் அடைவீர்கள்!- இந்தப் பேச்சு, 'விடுதலை' நாளிதழில், ஆகஸ்டு, 23, 1939ல், வெளியாகி உள்ளது.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !