உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - இரக்கம் என்பது...

* உலகம் என்பது...தன்னைச் சுற்றிஉள்ளவை என்பதில்தவறில்லை!* தன்னைத் தவிரஉலகம் இல்லைஎன்பதும்சரியில்லை!* கிட்டிய ஒற்றைநெல்லிக் கனியைக்கிழவிக்குக் கொடுத்தவன்வாழ்கிறான்!* எட்டியதெல்லாம்தனக்கே என்றுஎண்ணும் மனிதன்தாழ்கிறான்!*வாடிய முல்லைச்செடியைக் கண்டுவாடிய மன்னன்வாழ்கிறான்!* தேடிய செல்வம்தனக்கே என்றுதேடும் மனிதன்வீழ்கிறான்!* மண்ணில் நமக்குமனித வாழ்க்கைமறுபடி வருமாதெரியாது!* மனிதத் தன்மைஇல்லாதவராய்வாழ்தல் பெருமைகிடையாது!*இருக்கும் சொத்தைஇறைக்க வேண்டாம்;இரக்கம் என்பதுஅது இல்லை!* ஆண்டவன் அள்ளிக்கொடுக்கும் வளத்தைஅள்ளிக் கொடுக்கத்தேவையில்லை!* அதிலே கொஞ்சம்அன்பு கொண்டுகிள்ளிக் கொடுத்தால்தவறில்லை!* எத்தனை கொடுத்தோம்யாருக்குக் கொடுத்தோம்என்பதை எண்ணிவருந்தாமல்...*இருப்பதைக் கொடுத்துஏழ்மையைத் துடைக்கஇயன்றதைச் செய்யப்புறப்படுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !