உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மழைக்குப் பின்...* தேடித்தேடி அலைகிறது...மழைநீர்தங்கிக் கொள்ளஏரிகளும், குளங்களும்எங்கே என்று!* பயனின்றி அழியவே கூடாது...உணர்த்தியதுஇலை நுனியில்தொங்கிக் கொண்டிருக்கும்கடைசி சொட்டு மழைத்துளி!* இடுப்பிலிருந்து இறங்கிவிளையாடத் துடிக்கும்குழந்தையைப் போல்கெஞ்சிக் கொண்டிருக்கிறதுகாயப்போட்ட துணிகளில்தங்கிக் கொண்ட மழைநீர்!* ஏழைகளின் குடிசையில்எத்தனை ஓட்டை...அடையாளம் காட்டியதுமழைநீர்!* சோதனை கூடமாகிறதுமழைநீர்...காகிதத்தில் கப்பல் விடும்குழந்தை விஞ்ஞானிகளுக்கு!* சென்று வந்த இடங்களில்பதிந்து கிடக்கும்பாதச் சுவடுகளைகண்டு ரசிக்கிறது மனம்ஈர மணலில்!* மண்ணுக்கும் வாசமுண்டுஎன்று உணர்த்தியதுஆசை மழை!* தவளையின் குரலையும்ரசித்திட வைத்தது மழை ஓ#ந்த நேரம்!* சிறுதுளி பெருவெள்ளம்சேமிப்பை உணர்த்தும்மழைத்துளி!* குழிகளில் தேங்கிக் கிடக்கும்மழைநீரைதாண்டி செல்வோருக்குதெரிவதில்லைஇது பாவங்களை போக்க வந்தபுனித நீரென்று!* விவசாயத்தைமுத்தமிட்ட இடத்திலெல்லாம்கட்டடங்களாய் முளைத்துகொண்டிருப்பது கண்டுஅழுது புலம்பிடும் ஓசையாருக்கும் கேட்கவேயில்லைமழைவிட்ட பிறகும்!— ஆ.நடராஜன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !