கவிதைச்சோலை!
மகிழ்ச்சி ராஜாங்கம் செய்யட்டும்!என்றும் மகிழ்ச்சிஇதுவே மந்திரம்!மழை பொழிகிறதாவெயில் காய்கிறதாவெறுக்க வேண்டாம்குடை பிடிப்போம்குதூகலமாய் செல்வோம்!சேறு அடித்துவிட்டதா...நீரிருக்குதூய்மையாக்க!இழப்பா...அழ வேண்டாம்ஈட்டிக் கொள்ளலாம்!நோயா...நூதன மருந்துகள்வேதனை போக்கும்!கவலை நுழைகிறதா...மனதின் வாசலைமாற்றி அமைப்போம்!கண்ணீர் திவலையா...கண் ஒளியில்காய வைத்திடுவோம்!புள்ளிபோன்ற கவலையையேபூதாகரமாக்கும்உள்ளம் தவிர்ப்போம்!சிறுதானிய மகிழ்ச்சியிலேயேகுறுமுகை விண்மீன்குளிர் ஒளியை ரசிப்போம்!ஏற முடியாதவனுக்கேஅடிவாரத்தில்ஆயிரம் துயரங்கள்!துயரத்தின்உயரத்தில்துள்ளும் மகிழ்ச்சிதுரத்திப் பிடிப்போம்!வானம்நிலவொளியைமண்ணுக்கு அனுப்புகிறதுபதிலுக்கு நாம்பரவச மனங்களைப்பறக்க விடுவோம்!பறக்கும்திசையெங்கும்இசை பரப்பும்பறவை போல்நாம்வாசம் செய்யும்இடமெங்கும்மகிழ்ச்சிராஜாங்கம் செய்யட்டும்!— கே.ஜி.ராஜேந்திரபாபு, சென்னை.