கவிதைச்சோலை!
வாசம் செய்து வாழ்வோம்!எதனால்தடுக்கப்படுகிறது...தட்டிக் கொடுக்கப்படும்என் எண்ணம்!எப்படிஉதிர்ந்து விழுகின்றனஉயரப் பறந்தஎன் சிந்தனைகள்!ஆத்திரங்கள் மட்டுமேஆராதிக்கின்றன என்னை!எதிரியின்எட்ட முடியாத வெற்றியா...இல்லைவெற்றியை ஈட்டஎன்னால் முடியவில்லையா!பொறாமையென்னும்பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க எப்படி கற்றுக் கொண்டேன்!தேவைகள் இல்லாததீப்பொறிகளைதேடித் தேடிதேகத்தில் பூசிக் கொள்வதேன்!.புகழ் மாலை போர்த்தி வரும்புத்திரர்களை வரவேற்கபுன்னகைப் பூக்கள் இருக்கையில்ஆத்திரமென்னும்அஸ்திரம் அள்ளித் தெளிப்பது ஏன்?அதனால்தான்எதிரியின் வெற்றிப்படிகளைஎட்டி உதைக்கிறேனா!நண்பனின் நட்புப் பாதைகளில்முட்களின் முகவரிகளைமுன்னிறுத்துகிறேனா!என் புன்னகைப் பூக்களைபொசுக்கிதீப்பிழம்புகளை தெளிக்கிறேனா!பொறாமை-உள்ளத்தை உருக்குலைக்கும்உலைப்பட்டறை!சரீரத்தின் சதைகளைவேக வைக்கும்வெப்ப கனல்கள்!நம் சிம்மாசன கனவுகளைசிதைக்கும் தீப்பொறிகள்!இதில் மனதை மழுங்கடிப்பானேன்!மாற்றங்களை ஏற்படுத்திமகிழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளலாமே!வளர்த்துவிடும்வாழ்த்துச் சொற்களைவழங்கி மற்றவர்வளர்ச்சியில்வாசம் செய்து வாழலாமே!— க.அழகர்சாமி, கொச்சி