கவிதைச்சோலை!
நன்றி சொல்லலாமே!சிரிக்கின்ற பூக்களுக்குகுளிர்கிற பனிமழைக்குநிழல்தரும் மரங்களுக்குநன்றி சொல்ல கொஞ்சம்நேரம் ஒதுக்கினால் என்ன!அருந்தத் தந்த தாய்ப்பாலுக்குவிரும்பி தோள் சுமந்த தகப்பனுக்குநன்றி சொல்ல கொஞ்சம்நேரம் ஒதுக்கினால் என்ன!வழிகாட்டும் எழுத்துகளுக்குதுணையிருக்கும் நண்பர்களுக்குகைவிடாத நம்பிக்கைகளுக்குநன்றி சொல்ல கொஞ்சம்நேரம் ஒதுக்கினால் என்ன!கவனக்குறையை உணர்த்திய தோல்விகளுக்குவைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்குபாராட்டும்படி வளரச்செய்த பரிகாசங்களுக்கும்மனதிற்குள்ளாவதுமனமார நன்றி சொல்லலாமே!— ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.