கவிதைச்சோலை!
துணிவே துணை!சுவைப்பதற்கும், உமிழ்வதற்கும்உயிருடன் உலவும்நா ஒன்றுள்ளது!வானில் பறப்பதற்கும்மண்ணில் நிலைப்பதற்கும்எல்லையில்லா உயரங்கள்கனவுச்சிறகுகளால்பின்னப்பட்டுள்ளன!மறப்பதற்கும்நல்லதை நினைப்பதற்கும்எண்ணிலடங்காகாரண விதைகளைமனப்பறவை - இதயத்துள்மறைத்துள்ளது!வீழ்வதற்கும், வாழ்வதற்கும்வீறுகொண்டு எழுவதற்கும்உறுதி கொண்ட கால்கள்புத்தியெங்கும்புதிதாய் முளைவிட்டுள்ளது!அழுகையும், சிரிப்புமானசெயற்பெருங்கடலின்அலைகளில் மிதந்து நெஞ்சம்ஆர்ப்பரித்துக் கொண்டுள்ளது!விட்டு விலகுதலுக்கும்கட்டி அணைப்பதற்கும்பாசக் கயிறென இரு கரங்கள்துடித்துக் கொண்டுள்ளன!அன்பைச் சுவைப்பதற்கும்வம்பைச் சுமப்பதற்கும்நெஞ்சுக்குள் நிற்காதகடிகாரமாய் இதயம்துடித்துக் கொண்டுள்ளது!இனி எதற்குவீழ்ச்சியின் விளிம்புகளில்விளக்கொளியின்தேடல்கள்!நம்மால் தொட முடியும்சிகரங்களைசீர்தூக்கத் தெரிந்தால்மறுப்பின்றி ஒட்டிக்கொள்ளும்துணிவே துணையாக!— செல்லம் ரகு, திருப்பூர்.