உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வண்ணப் பூத்திரிகள்!ஆசையேநம் கறுப்பு - வெள்ளைஎண்ணங்களுக்குவண்ணம் பூச நினைக்கிறது!பேராசையேநம் வண்ண கனவுகளுக்குகொள்ளை நிறங்களைகொட்ட நினைக்கிறது!எண்ணங்களில் வண்ணங்கள்வலம் வருவது ஆசைவண்ணங்களில் எண்ணங்கள்மூழ்குவது பேராசை!அளவோடு தீட்டிய வண்ணங்கள்எண்ணங்களை அழகாக்கிறதுஅள்ளிக் கொட்டிய வண்ணங்கள்எண்ணங்களை பாழாக்கிறது!என்றுமே சாயம் போவதில்லைநம் கறுப்பு - வெள்ளை எண்ணங்கள்காலத்தின் கோலத்தில்நரைக்கத் துவங்குகிறதுநாம் கொட்டியவண்ணங்களின் எண்ணங்கள்!கிட்டிய எண்ணங்கள்எதிர்பார்ப்பு ஏதுமின்றி கறுப்பு - வெள்ளை எண்ணங்களில்வாழ்க்கையை வசந்தமாக்குகிறது!கிட்டாத எண்ணங்கள்இலவு காத்த கிளியாய்இல்லாத வண்ணங்களில்வாழ்க்கையை தொலைக்கிறது!ஆசையை துறந்தவர்கள்கறுப்பு - வெள்ளை எண்ணங்களில்கசங்கிப் போகாமல் இன்னுமகாட்சி அளிக்கின்றனர்!பேராசையில் திளைத்தவர்கள்வண்ணங்களில் உபரியில் வழிந்தோடிவாழ்க்கையின் வாயிலைக்கூடமிதிக்க முடியாமல் சாயமிழந்துசரித்திரத்தை தொலைக்கின்றனர்!அளவான எண்ணங்களுக்குவளமான வண்ணம் பூசுபவன்வாழ்க்கையென்னும் வசந்த மாளிகையின்வாசலை அடைகிறான்!ஆலாய் பறக்கும் எண்ணங்களுக்குஅவசரத்தில் வண்ணம் பூசுபவன்வாழ்க்கையென்னும்உல்லாச படகை மூழ்கடிக்கிறான்!சிறகடித்துப் பறக்கும்நம் எண்ண அலைகளைகொட்டிய வண்ணங்களில்தொலைப்பதை விடுத்துஎன்றும் நிலைக்கும்கறுப்பு - வெள்ளை எண்ணங்களில்வானவில் வண்ணம் தீட்டிவாழ்க்கையைவண்ணப்பூத்திரிகளாக மாற்றிநல் எண்ணங்களில்பொன் வண்ணம் காண்போம்!— க.அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !