உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒப்பிலா உறவு!உயிர் தந்தோர் இருவர்கல்வி தந்தோர் பலர்உலக அறிவு தந்தோர்நீங்கள் தான்!உங்களைஎன் வாழ்க்கையில்நான் தான்இணைத்துக் கொண்டேன்உற்ற தோழனாய்காலம் பல கடந்தும்என்னை விட்டுநீங்கள் பிரியவில்லை!சிலரை வேண்டுமென்றேபிரிந்து விட்டேன்வெறுப்பினால் அல்லஎன் வீட்டில் இடம் இல்லாததால்!அப்படிப் பிரிந்த சிலரும்இன்றும் என் மனதில்!என்று உங்களிடம் நான்வந்தாலும்ஏன் இத்தனை நாள்என்னை மறந்தாய் என்றுகேட்க மாட்டீர்கள்அதே அன்பு, அதே பாசம்அதே நேசம், அதே பகிர்தல்!உங்களை என்ன உறவென்று சொல்வது...வாழ்க்கையின் அர்த்தத்தையும்அனர்த்தங்களையும் அவசியத்தையும்இத்தனை வயதான பின்பும்இன்றும் அயராதுஎடுத்துச் சொல்கிறீர்கள்!உங்களின் உயர்ந்த உறவைப் புரிந்து கொள்ளாதவர்களும்இந்த உலகில் உண்டு!போனால் போகட்டும்எனக்கு மட்டும்நான் மறையும் வரைஉங்கள் உறவு வேண்டும்!உங்களுக்கும் விலை உண்டுஎன் அன்பான புத்தகங்களே...ஆனால், உங்கள் ஒப்பிலாஉறவுக்கோ இந்தஉலகில் விலையே இல்லை!- தேவவிரதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !