உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்க்கை ஒன்றுதான்! உலை அரிசிக்கு தெரிவதில்லை - அதுஉருமாறி பலரின் பசியாற்றப் போவது!ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை - அதுஅரைபட்டு பின் அடுப்புக்கு போவது!அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை - அதுமங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை - அதுசந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை - அதுஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!அரிசி ஒன்று தான் - ஆனால்,பயன் வேறு வேறு!வாழ்க்கை ஒன்று தான் - அதுவாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !