உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சபதம் எடுப்போம்!பொய்க்காத பருவமழைபொய்த்துப் போனதுமரங்களை வெட்டிச்சாய்த்தமனிதமற்ற மனிதர்களின்பொய்யான வாழ்வால் தான்!அடிக்கடி பூகம்பமாய்பூமி பொங்குவதெல்லாம்அன்பில்லாமல் அதன் இதயம் வரைஆயுதங்களால் தோண்டுவதால் தான்!ஏரிகளும் குளங்களும்மனிதர்களின் குடியிருப்புக்குள்நுழைவதெல்லாம்தங்களின் குடியிருப்பைமனிதர் பறித்துக் கொண்டதவிப்பில் தான்!அடிக்கடி இல்லையென்றாலும்அவ்வப்போதுதன் எதிர்ப்பை காட்டத்தானேசெய்யும் இயற்கை!ஆனாலும்தன்னைக் காப்பாற்று என்றஇயற்கையின் எதிர்க்கூச்சல் எல்லாம்தனக்குள்தன்னை நம்பி வாழும்மனிதரையும் காப்பாற்றத்தான்என்பதை எப்போதுபுரிந்து கொள்ளப் போகிறோம்!சுயநல வாழ்வென்னும்நுனிக்கிளையில் அமர்ந்துஇயற்கை எனும்அடிக்கிளையை வெட்டுவதால்இயற்கைக்கு முன்பேவீழப்போவது யார்?இனிமேலும் தாமதிக்காமல்இன்றே இப்போதேசபதம் எடுப்போம்...இயற்கையை அழிக்கும்இரக்கமற்ற செயலைசெய்யாதிருக்கவும்இயற்கை அடுத்தொரு சீற்றம்கொள்வதற்கு முன்பே அதைஅன்பாய் அரவணைக்கவும்!கீர்த்தி, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !