உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புதியதோர் உலகு செய்வோம்! வன்முறையின் உச்சத்தில் உலகம்...வரம்பின்றி ஓடுகிறது குருதியாறு!வயதுவரம்பின்றி சாகின்றனர் மக்கள்மனிதநேயம் குன்றியதால்மிருகங்களாயினர் பலர்!தாய்மொழி பேசியதால்வாய்மொழியின்றி நின்றனர் சிலர்வாழ்வே கேள்விக்குறியாய்!பட்டம் வாங்கச் சென்றவர்களைபடுகொலை செய்தனர்இனவெறியின் பிடியில்இளைய சமுதாயம் மேலைநாடுகளில்!மனமென்னும் நிலத்தில்மதமென்னும் விதையை நட்டுவெறியென்னும் அமிலம் விட்டால்வேரோடு சாய்ந்து விடும்மனிதச் சமுதாயம்!உதரத்தில் துவங்கட்டும் மாற்றம்உயர் பண்போடு பிறக்கட்டும் மொட்டுக்கள்அன்பால் வெற்றிகொள் உலகை - உன்பண்பால் பெருமைப்படும் நாடே!பிறக்கும் போது பெருமையில்லைபிறர் மதிக்கும்போதுதான்பெருமையும் பிறக்கிறது!தாய்மையோடு தாயகத்தையும் போற்றுவோம்வாய்மையோடு தரணியையும் நேசிப்போம்புதியதோர் உலகு செய்வோம்போரிடும் செயலை போராடி வெல்வோம்அமைதி பூங்காவாகட்டும் அகிலம்அகிம்சையோடு வெற்றிகொள் உலகை!ரெஷ்மி சிவகுமார், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !