கவிதைச்சோலை!
கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!சிருஷ்டிகளின் சிகரங்கள்இரண்டு...இந்தஇரண்டையும் நேசிக்காதஇதயங்கள் இருக்க முடியாது!அவை -பிறவியின் மதிப்பைபிரதிபலிக்கும் அடையாளங்கள்இணைப்பையும், பிணைப்பையும்ஏற்படுத்தும் உறவுப் பாலங்கள்!அளவாய் இருக்கையில்ஆனந்தக் களிப்பையும்அதிகமாகையில்அச்சத்தில்தவிப்பையும் தருபவை!இரண்டையும்ஒற்றை நாமத்தாலேயேஉலகம் அழைக்கிறது!குழந்தையும், பணமும்'செல்வம்' என்று தானேகொண்டாடப்படுகின்றன!இவை இல்லாதிருப்போரின்இதய வலிசொல்லில் விவரிக்கமுடியாத சோகமானது!தக்கார் தகவிலார் என்பதுஎச்சத்தால் காணப்படுவதுவாழ்வின், 'உச்சமாகவும்'வாழ்ந்ததன், 'எச்சமாகவும்'அமையும் அடையாளங்கள்!இவை இல்லாதவர்களைஉலகம் அலட்சியப்படுத்துகிறதுஇருப்பவர்களோஉலகை அலட்சியப்படுத்துகின்றனர்!இந்த நிலை மாற -கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்காசு, பணத்தை மட்டுமல்லகடவுள் கொடையானகுழந்தைகளையும்!—ஆர்.முரளி, ஸ்ரீவில்லிபுத்துார்.