உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உய்த்தலென்பது யாதெனில்...நீ யாரையும் பார்த்துஇயங்க வேண்டாம்...உன் செயல் திறனேஉன்னை செதுக்கட்டும்!அடுத்தவரின்அழுத்து விசையில் உழலநீயொன்றும்,இயந்திர மனிதனல்லமந்திர மனிதன்!உன்னால் இயலும் என்பதேஉன் இயக்கத்திற்கான விதி!மர உச்சியில் வீற்றிருக்கும்பழங்கள் கூடஉன் கண்ணடிபட்டுவிழுவதில்லைஉன் கல்லடிபட்டேவிழுகிறது!வாழ்க்கை உனக்குவசமாவதும்அதுவே உனக்குவிஷமாவதும்உன் கைகளில் தான் இருக்கிறது!உனக்குப் பிடித்தஅந்த ஒரே விஷயத்தைதிரும்பத் திரும்ப செய்அதையே விரும்பி செய்வெற்றியடைவாய்!உய்த்தல் என்பது யாதெனில்...எப்போதும் அதுகண்ணாமூச்சி விளையாடியேபழக்கப்பட்டது...அதை உன் சுயவட்டத்திற்குள் அடக்கஅதிரடி செயலுாக்கம் தேவை!இவ்வுலகத்தைகால்பந்து மைதானமாய்நினைத்துக் கொள்...உன் அருகே வரும்'பந்து' என்கிற அந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திஅதை வளைக்குள்திணிக்க போராடு!அழகான ரோஜாதான்...ஏனோ, தானோவென்றுபறித்தால்அதன் முட்கள் உன் விரலைபதம் பார்த்து விடும்...எதையும் நுணுக்கமாகவும்,சற்று தெளிவாகவும் செய்தால்உன் கழுத்துப் பூமாலையேஉன்னை மலர் துாவி வரவேற்கும்!மொத்தத்தில் நீவிழுவதும், விளைவதும்உன் முயற்சியில் தான்இருக்கிறது! அதிரை.இளையசாகுல்,முத்துப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !