கவிதைச்சோலை!
பெண் என்னும் பொக்கிஷம்!பெண் என்பவள் பேசத் தெரிந்த தெய்வம்!அங்கேகருவறைக்குள் தெய்வமிருக்கும்இங்கேஇவளுக்குள்கருவறை இருக்கும்!கற்சிலையாய் ஓரிடத்தில்கண்மூடி அமராமல்கால் கடுக்க வீடெங்கும்நடமாடும் தெய்வம் அவள்!வேண்டுதல் ஏதுமின்றிவிரதங்கள் ஏதுமின்றிஅன்பு, பாசம், காதல்கருணை என வரம் தந்துவாழ்வளிக்கும் தெய்வம்!அன்னை, சகோதரிமனைவி என்றெல்லாம்அவதாரம் பல எடுத்துஅரவணைக்கும் தெய்வம்!அடுப்படியில் நின்று தினம்வெந்து மெலிந்திருப்பாள்...ஆண்களின் வெற்றிக்கு பின்னேஅவளே ஒளிந்திருப்பாள்!மலர் போல மெல்ல பேசும்தென்றலும், அவள் தான்!தீங்குவரின் புயலென வீசும்பெருங்காற்றும் அவள் தான்!அன்னை தெரசா போல்அன்பு மழை பொழிவாள்வேலுநாச்சியாய் அவளேவாளெடுத்தும் வீரம் காட்டுவாள்!கற்புக்கு கேடு வரின்கனல் கக்கும் எரிமலையாவாள்காதல் பேசும் நேரம் வரின் சில்லென குளிர்விக்கும் பனிமலையாவாள்!புது புது அர்த்தம் கொடுக்கும்புலமை மிகு புத்தகம் பெண்...போற்றிக் காக்க வேண்டியவிலை மதிப்பில்லாபொக்கிஷம் பெண்!மீனாசுந்தர், காஞ்சிபுரம்.