கவிதைச்சோலை!
இயற்கையும், மனிதனும்! விதை...செடியாக, மரமாகபூ பூக்ககாய் காய்க்ககனி கொடுக்க மறுப்பதில்லை!சூரியன்...ஒளி கொடுக்கஉயிர் கொடுக்கவாழ வைக்க மறுப்பதில்லை!மழை...மண் நனைக்ககுளிர வைக்கநன்னீர் கொடுக்கவயல் நிறைக்க மறுப்பதில்லை!நிலவு...குளிர்ச்சி தரதண்ணொளி தரதென்றல் தரநல்லுறக்கம் தர மறுப்பதில்லை!மனிதனே...மரங்களை அழித்தாய்நீர் தடங்களை அடைத்தாய்காற்றை அசுத்தமாக்கினாய்விதைக்க தவறினாய்விவசாயத்தை மறந்தாய்இயற்கையை அழித்தாய்...இன்று...பருவம் மாறியதுமழை பொய்த்ததுவிவசாயம் அழிந்ததுபுவி வெப்பமயமானதுபஞ்சத்தை நோக்கி போகிறோம்!விழித்துக் கொள் மனிதா...பாதையை மாற்றுஇயற்கையை நேசிமரங்களை நட்டுபருவ மழைக்கு அழைப்பு விடு!நீர் நிலை பெருக்கிவிவசாயம் செழிக்க செய்துஇயற்கையோடு இணைந்து வாழ்வரும் தலைமுறை வாழ்த்தட்டும்!— ஈஸ்வரி நந்தா, ஈரோடு.