உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பெண்ணின் பெருந்துயர்!உறக்கத்தில் ஆழ்ந்திருந்தயசோதரையை தவிக்க விட்டுநள்ளிரவில் ஓடிஞானம் பெற்றான் புத்தன்!எவரோ சொன்ன அவச்சொல்லுக்காய்சீதையை நெருப்பில் இறக்கிதன்னைதுாய்மைப்படுத்திக் கொண்டான் ராமன்!இந்திரனின் பொய் கூவலுக்கு ஏமாந்துநடு இரவில் குளிக்கப்போன கவுதம முனிஅகலிகையை கல்லாய் சபித்துகவுரவம் காத்துக் கொண்டான்!தனித்து இயங்கிதன்னை விடவும்உயர்ந்து விடக் கூடாதென்றஉள்ளரசியலில் தான்உமைக்கு இடபாகம் கொடுத்திருக்க வேண்டும்சிவன்!கஸ்துாரிபாயின்தியாகமும் உழைப்புமின்றிதேசத்தின் தந்தையாய்உயர்ந்திருக்க முடியாது காந்தியால்!சரித்திரம் புராணம் எதுவானாலும்ஆணின் அத்தனை உயர்வுகளுக்கும்பின்புலமாக இருந்திருக்கிறாள் பெண்பெண்ணின் அத்தனைப் பெருந்துயரங்களுக்கும்காரணமாக இருந்திருக்கிறான், ஆண்!எம்.சித்ராதேவி, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !