கவிதைச்சோலை!
பெரிதினும் பெரிது கேள்!அயர்ந்த துாக்கத்திலும்அரை கண் விழித்திருவரம் தரும் தேவதைகள்வந்து வாசல் தட்டலாம்!கால் ஆட்டியபடியேகண்ணயர்ந்து துாங்குஎழுந்து கொள்ளும்எச்சரிக்கையோடு இருப்பதாகபுறப்பட்டு வந்த தேவதைபுரிந்து கொள்ளட்டும்!வரும் தேவதைக்கு தேவைவணக்கம் அல்லஇணக்கம்!கைகள் பற்றிகண்ணியமாய் கேள்உன் தகுதியை தள்ளி வைஉன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே!என்ன வரம் வேண்டும்என்று கேட்டால்கேள்... பெரிதினும் பெரிது கேள்!கேட்கப்படாததால்பல தேவதைகள், கஜானாக்களைகாலியாக்காமலேயேதிரும்பியிருக்கின்றன!வரம் கேட்போர்வரிசையில் காத்திருக்கின்றனர்வரம் தரும் தேவதையிடம்கேட்க வேண்டியதுவரம் அல்ல!கேள்... பெரிதினும் பெரிது கேள்!எதையும் தரதயாராய் இருக்கும் தேவதையிடம்'கஜானாவோடு தேவதையாவது' எப்படி என்னும் ரகசியத்தை கேள்அதை ரகசியமாய் அல்லஊர் அறிய கேள்உன்னை பிறர் அறிய கேள்ரவுத்திரத்தோடு கேள்ஏனெனில்,நீ போராடும் இடம் போர்க்களம் அல்லவாழ்க்கை!வே.புவனா, குன்னுார்.