உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எது தேசம்!எம் முந்தையர்ரத்தம் சிந்தியவேள்வியில்விளைந்ததுஇந்திய தேசம்!எந்த நாட்டிலும்இல்லாவிந்தைகள் ஆயிரம்இருந்திடும் தேசம்!மலையும், காடும், ஓடும் நதியும்,அலையும் கடலின்ஒவ்வொரு துளியும்,என் தேசத்தின்பெருமை பேசும்!இந்திய மலைக்கும்முக்கடல் முனைக்கும்சுதந்திர காற்று வீசும்!முகங்களில்மொழிகளில்வேற்றுமை இருக்கலாம்...மதங்களில் கூடபலவகை இருக்கலாம்...மனங்களில்நாங்கள் இந்தியர்கள்!அன்னை பூமியாம்பாரத நாட்டின்பிள்ளைகள் என்பதில்எத்தனை எத்தனைஆனந்தம்!எல்லைக்குள் ஏதும் தொல்லைகள்என்றால்,ஒவ்வொரு வீட்டிலும்ஆள் வரும்!வாங்கியவிடுதலையைதாங்கிப் பிடிப்போம்!வான் முட்டிபறக்கட்டும்சுதந்திர கொடியைதுாக்கிப் பிடிப்போம்!இந்தியன் என்பதில்பெருமிதம் கொள்வோம்!எப்போதுகேட்டாலும்தப்பாது சொல்வோம்!வாழ்க இந்தியமணித்திரு நாடு!அழகர், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !