கவிதைச்சோலை
நினைவில் நின்றவள்!இவ்வுலகில் நீ இல்லைஎன அறிந்தாலும்உன் நினைவால்வரும் அழுகையும்ஆனந்த கண்ணீராக தான்சொரிகிறது!நீயும் நானும்சொந்தமில்லை தான் - எனினும்என் கண்ணீரை உனக்குசொந்தமாக்குகிறேன்!மண்ணுலகில் நம்மிடையிலானநட்பைப் பார்த்துபொறாமை கொண்டதோ விண்ணுலகம்...உன்னை தன்னிடம்அழைத்துபழித் தீர்த்துக் கொண்டதே!என் முத்தான தோழியே...எப்போதும் என் கைக் கோர்த்துதிரிவாயே...என்னை விட்டு பிரியஎப்படி மனம் வந்தது!உன்னைப் பிரிந்து தவித்தநாட்கள் கணக்கில் அடங்காது...காலன் உன்னைஅவசரமாக அழைத்தகாரணம் தெரியாமல்புலம்புகிறேன்!என் ஒவ்வொரு நாளையும்உன் நினைவுகளுடனேபயணிக்கிறேன்!புன்னகை சிந்தும் உதடு எனஎன்னை சிலாகிப்பாயே தோழி...உன் பிரிவால்சிரிப்பையே மறந்து விட்டேனடி!அடுத்த பிறவி ஒன்றிருந்தால்நம் நட்பை உயிர்ப்பித்துநட்பிற்கு இலக்கணம் நாம் என்று உலகிற்கு காட்டுவோம்என் அருமை தோழியே!கா. இந்துமதி, சென்னை