உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

முயற்சியே வெற்றி!கால்கள் நடக்க தயாரானால்பாதைகள் மறுப்பதில்லை!ஈட்டிகள் பாயத் துவங்கினால்இலக்குகள் மூடுவதில்லை!உண்மைகள் பேச ஆரம்பித்தால்பொய்கள் வேஷமிடுவதில்லை!புண்ணியங்கள் தொடர ஆரம்பித்தால்பாவங்கள் நிலையாவதில்லை!பகல்கள் விடிய ஆரம்பித்தால்இருள்கள் சூழ்வதில்லை!அன்பு பொழிய துவங்கினால்ஆணவங்கள் கொள்வதில்லை!சமாதானங்கள் கூட ஆரம்பித்தால்சச்சரவுகள் காண்பதில்லை!புகழ் மாலை தோளில் விழ ஆரம்பித்தால்அவமானங்கள் தலை நிமிர்வதில்லை!முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால்வெற்றிகள் ஓடி ஒளிவதுமில்லை!முத்துாஸ், ராமநாதபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !