உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாரமலரே... என் (சு)வாச மலரே!புத்தகம் அறிவைப் பிளக்கும்கோடாலி என்று அறிஞர்ஒருவர் சொன்னதாய் நினைவு!ஆயிரம் புத்தகங்கள் பத்திரிகைஉலகில் அணிவகுத்து நின்றாலும்அவற்றை எல்லாம் புறம்தள்ளிபுதியதோர் சரித்திரம் படைத்தபுதினம் வாரமலரே!விசேஷம் என்ற பெயரில்வித்தியாசமான ஆன்மிக தலங்களைநம் வீட்டின் கருவறைக்கேகொண்டு வரும் அற்புத மலர்!இது உங்கள் இடம் - என்றுஎல்லாருக்கும் அனுபவங்களைபாடமாக சொல்லித் தரும் வகுப்பறையாகவாரமலர் தரும், இது உங்கள் இடம்!கலை உலகில் சீரிய பணியாற்றியமகா ஆளுமைகளின் சரித்திரத்தைமுன் உதாரணமாக சொல்லும் மலரும் நினைவுகள்!வாரமலர் வாடாது இருக்கஆணிவேராய் இருந்துஅறிவென்ற நீர் ஊற்றும்அதிமேதாவி அந்துமணியாரின்பா.கே.ப., மற்றும் கேள்வி பதில் பகுதி!சிந்தனையை சீர்படுத்தி சமுதாயசீர்திருத்த கருத்தை சிறப்புடன்சொல்லும் சிறுகதைகள்!உலக விஷயங்களை நம்உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்க்கும் ஜோரானஜோல்னாபையன்!ஞானம் பெற்று ஆனந்தமாய்நாம் வாழ பக்தி பாதையில் - நம்சிந்தனையை அழைத்துச் செல்லும்ஞானானந்தம்!நடுத்தெரு என்று நக்கலாக பெயர் வைத்துஉலகத்து செய்திகளை திரட்டி நம் கையில்கொடுக்கும், 'திண்ணை' பகுதி!அறிவை விரிவாக்கவும், அந்தஅறிவை நுண்ணறிவாக்கவும் வரும்எட்டு வித்தியாசங்கள், குறுக்கெழுத்துப் போட்டி!கவலையை விடு வாரமலரை கையிலெடுதன்னை மறந்து சிரிக்கலாம் என்றுசொல்லும் தமாசு பகுதி!கலை உலகின் ரகசியங்களைதெரியாத செய்திகளை தெளிவாகசொல்லும் துணுக்கு மூட்டை!வாழ்வியலில் வரும் சந்தேகங்களைபோக்கும் அன்புடன் அந்தரங்கம்!எத்தனையோ அறிவுப் பக்கங்களை - தாங்கிஞாயிறன்று அதிகாலை பூக்கும்என் (சு)வாச மலரே!பத்திரிகை என்ற உலகிலே - நீ!வார்த்தைகளால் கட்டப்பட்டவானுயர்ந்த பல்கலைக் கழகம்!— எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், விருதுநகர்.வாடா மலர்!முடிந்தவுடன்கை கழுவி கடந்து போவதற்குசாப்பாட்டு பாத்திரமல்ல - அதுவைத்து காக்க வேண்டியவைரக்கல்லுக்கு மேல் வரமானது!தளர்ந்தவுடன்தரையில் போட்டு சவுட்டுவதற்குகளைச்செடிகள் அல்ல - அதுதலையில் சூட்ட வேண்டியதங்க கிரீடத்துக்கு மேல் தரமானது!உலர்ந்தவுடன்உதறிவிட்டு சிதறிச் செல்வதற்குஉதிர்ந்த பூக்களல்ல - அதுஅடுத்தடுத்து சுவாசிக்க வேண்டியஅற்புத மலருக்கும் மேல் அதிசயமானது!ஏதோ ஒரு மூலையில்நால்வருக்கு மத்தியில் நடந்து முடியும்விவாத மேடையல்ல - அதுஎல்லா வினாக்களுக்கும் விடை தரும்விசித்திர களஞ்சியத்துக்கும் மேல் வித்தியாசமானது!அதன் சாதனைகள்சரித்திரத்தின் பக்கங்களிலல்ல - அதுசந்தோஷத்தை அள்ளிப் பருகும்வாசகர்களின் உள்ளங்களில்!அதிசய அற்புதங்களை அவ்வப்போதுஅள்ளித்தரும் அட்சய பாத்திரம் - அதுஅறிவுப்பசி துாண்டி அகிலமெல்லாம்ஆணி வேர் விட்டு வந்த ஆலமரம்!இதன் இலைகள்இதயத்திற்கு இனிமையின் விருந்தாகும்அதன் கிளைகள்அனைவருக்கும் அமிழ்தான மருந்தாகும்!ஆண்டுக்கு ஒருமுறைவார்த்தைகள் தாங்கி வரும்வாழ்த்து அட்டை அல்ல - அதுஆண்டுகள் கடந்தும் வாகை சூடவாரா வாரம் வரும் வாரமலர்நம் வாசத்தையும் வாசல்கள் தோறும்எடுத்துச் செல்லும் வாடாமலர்!அது, வான் முட்டி வண்ணங்களாய்வாசல் தோறும் வலம் வந்து செல்லட்டும்...அது, தேனுாட்டி வாசகர்களுக்குவாரம் தோறும் வரம் தந்து வெல்லட்டும்!— க. அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !