உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஓட்டு!என் மதம் என ஒரு ஓட்டுஎன் ஜாதி என ஒரு ஓட்டுஎன் கட்சி என ஒரு ஓட்டு!என் எதிரிக்கு எதிரி என ஒரு ஓட்டுஎன் கூட்டணி என ஒரு ஓட்டுஎன் பங்காளி என ஒரு ஓட்டு!ஆசை வாக்குறுதிகளை நம்பி ஒரு ஓட்டுஅதிகம் கொடுத்ததால் ஒரு ஓட்டுஇவராவது செய்வாரா எனும் எதிர்பார்ப்பில் ஒரு ஓட்டு!யாருக்காவது போடுவோம் என ஒரு ஓட்டுயாருக்குமே வேண்டாம் என ஒரு ஓட்டு!- இப்படிஎண்ணி எண்ணி வாக்களித்தவர்களே...சிந்தித்து செயல்படுவீர்!பகல் வேஷம் போடுபவர்களுக்கோபசப்பு வார்த்தை பேசுபவர்களுக்கோ'டோக்கன்' கொடுத்து வளைப்பவர்களுக்கோகவரில் வைத்து கொடுப்பவர்களுக்கோஉங்கள் பொன்னான ஓட்டை விற்றால்தேர்தலுக்கு பின்...உங்கள் வீட்டு ஓட்டை பிரித்து,'கன்னம்' வைத்த தடம் தான் தெரியும்நீங்கள் ஏமாந்து போன உண்மை புரியும்!வாக்காள பெருமக்களே...சிந்தித்து செயல்படுவீர்!இப்போது சிந்திக்கவில்லையெனில்இனி வரும் ஐந்தாண்டுஉங்களுக்கானதாக இருக்காது!எஸ்.ஆர். சாந்தி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !