கவிதைச்சோலை!
வெற்றிகளை தலையிலேற்றாதே!வெற்றிகளைதலையிலேற்றாதேகனம் தாங்காமல் தவற விடலாம்!புகழ்ச்சிக்கு அங்கீகாரம்கொடுக்காதேஎழுத்துகள் பிழன்று அகங்காரமாகி விடலாம்!பதவிக்கு அலையாதேபாசத்தை தொலைத்துபரிதவிக்கலாம்!பணத்திற்கு விலை போகாதேமனசாட்சியிடம் மறையும் வரை மண்டியிட வேண்டியிருக்கலாம்!துளையுள்ள மூங்கிலும்தன் ஊனத்தைபலமாக்கி காட்டிடவில்லையா!ஊனமுள்ளவரும்தன் உழைப்பை நம்பிவாழ்ந்திடவில்லையா!கல்வி மட்டுமே நிலையானநிலை தரும்...அதில்லையேல்உழைப்பு ஒன்றே நிரந்தரஉயர்வு தரும்!மு.கவுந்தி, சென்னை.