உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காலமென்னும் மருந்து!கால தேவன் எல்லாகாயங்களுக்கும் மருந்து போடுகிறான்காயங்களில்லாமல் வலிக்கிறஉள் மனக்காயங்களை தவிர!கால தேவனின் கட்டுப்பாட்டில்கவிழ்ந்து போவது வலிகள் மட்டுமின்றிகாலத்தோடு சேர்ந்து மாற்றங்களையும்அள்ளி விதைக்கிறான் அவனியிலே!நாவால் சுட்ட வடுக்களுக்குவடிகால் படிக்கும் கால தேவன் - ஆறாதெனினும்மறக்கடிக்க மாய மருந்தொன்றைமன மஞ்சமதில் துாறலாய் பொழிந்துவிட்டுப் போகிறான் மாய மானாக!கால தேவனின் கணக்கில்பல்லாயிரம் நொந்துபோனஆன்மாக்கள் மகிழ்ச்சிப் பூக்களைசூடியிருக்க...தாடிகளைத் தாண்டி பல நல்லஉள்ளங்களை சமைத்துவாழ வைத்திருக்கிறது!கால தேவன் எல்லா நோய்களுக்கும்மருந்து தரும்சர்வ ரோகிணியாய் விரிந்துபடர்ந்து ஆட்சி நடத்திடுகிறது!கடந்து போகும் நதியின்நீரைப் போல கடந்துபோகும்காலம் எனும் காலதேவன்!ரஜகை நிலவன், மும்பை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !