உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அமைதி எனும் அமுதம்!மனித மனதின்ஏக்கங்கள் பல...ஆனால்இலக்கு ஒன்று!பேராசைக்கும்நிராசைக்கும் இடையே'பெண்டுலமாய்' ஆடுகிறதுசஞ்சல மனம்!பேராசையும்நிராசையும்ஆளுக்கொரு பக்கமாகபோர்க்கடல் எனும்பாற்கடல் கடைய வந்த அமுதம்அமைதி!அமைதி அமுதத்தைகடைந்தெடுத்ததைகவுரவிக்கும் தினமேசெப்டம்பர் இருபத்தொன்று!அந்த நாள் -போருக்குமுற்றுப்புள்ளி வைத்ததோ இல்லையோஅமைதிக்குவெற்றித் திலகம் வைத்தது!உலகம் -பெற்றுத் தந்த வெற்றிகளை விடகற்றுத் தந்த அமைதிவென்றவருக்கும், தோற்றவருக்கும்வெற்றியைபகிர்ந்து தந்து, பரிசாயிற்று!தேவையேகண்டுபிடிப்பவர்களின் தாயாம்தேவையைஇல்லாமற் செய்யகண்டுபிடித்தஅமைதியை என்னவென்பது?இன்றளவும் -மூள இருக்கும் போர்களுக்குமுட்டுக்கட்டை போடுகிறதுஐக்கிய நாடுகள் சபையின்அமைதிச் சபை!மறந்து போய்விட்டபிறந்த நாட்களுக்காகமன்னிப்பை மன்றாடுகிறோம்!விடுபட்டு விட்டவிவாக நாளுக்காகவேதனைப்படுகிறோம்!அவையெல்லாம்நமக்கான நாட்கள்!உலக அமைதிக்காக,உலக அமைதி நாளன்றுஉலக அமைதி ஓங்க என்றுகுரல் கொடுப்பதுபொருள் கொடுப்பதைக் காட்டிலும்போற்றுதலுக்குரியது!வளர்கவி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !