உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பாரதியின் நுாற்றாண்டை போற்று!டிச., 11, பாரதியார் பிறந்த தினம் (நுாற்றாண்டு விழா சிறப்பு கவிதை) பாருக்குள் நல்ல நாடு பாரத நாடென்றார்நீருக்கு வங்கத்தை காட்டினார் - சீர்மிகுசாரமாய் தேசத்து ஒற்றுமையை முன்மொழிந்தபாரதியின் நுாற்றாண்டைப் போற்று!செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன்வந்து பாயும் காதினிலே என்றாரே - சிந்தையில்தாரக மந்திரமாய் தாய் தமிழால் ஆர்ப்பரித்தபாரதியின் நுாற்றாண்டைப் போற்று!நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நடையுமாய்பாரில் புதுமைப்பெண் வார்த்தாரே - வீரமிகுகாரிகையர் கண்டெடுத்த மாசிலா நற்கவிஞர்பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!வல்லமை தாராயோ வேண்டியே கேட்டாரேநல்லவை நாளும் நவின்றாரே - செல்வங்கள்சேர்க்க விழையாமல் வித்தகத்தால் ஓங்கியவர்பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்டவர்அஞ்சா இடமுமில்லை என்றாரே - துஞ்சாதவீரத்தை வேரிலேயே வித்திட்ட ஞானகவிபாரதியின் நுாற்றாண்டைப் போற்று!ஆரமுது உண்டோர் அடிமையாகி நிற்பாரோசோர்வில் மயக்கும் மது அருந்தி - தீர்க்கமாய்வீரச் சுதந்திரம் வேண்டியே நின்றாரேபாரதியின் நுாற்றாண்டைப் போற்று!தர்மத்தின் வாழ்வினை சூதும் சிலவேளைகர்மத்தால் கவ்வகூடும் கள்ளமில்லை - தர்மங்கள்ஆர்த்தெழுந்து சூதை அழிக்கும் இறுதிலென்றார்பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!சென்றது மீளாது சென்றதையே எண்ணாதீர்இன்று புதிதாய் பிறந்தோம் என்றுரைப்பீர் - நன்குணர்ந்துசாரதியாய் முன் நின்று சாற்றிய சக்திமான்பாரதியின் நுாற்றாண்டைப் போற்று!டி.ஆர்.வெங்கடேசன், பெங்களூரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !