உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கவலைகள் தின்னத் தகுமோ?* உலக வாழ்க்கைமகிழ்ந்து களிக்கவா...கவலைகளில்வாடித் துடிக்கவா?* வாழ்க்கை போடும்சிக்கல் முடிச்சுகள்,கவலைப்படுவதால்கழன்று கொள்ளாது!* எல்லா மனிதரையும்எதிர் கொள்கிறதுபோராட்டங்கள்...பண ரீதியாய்,பண்பாட்டு ரீதியாய்,சொந்தபந்தங்கள் பின்னும்சூழ்ச்சி வலைகளால்!* கவலைப்படுவதுநேரத்தை மட்டுமா வீணடிக்கிறது...தேகத்தையுமல்லவா நோகடிக்கிறது!* கவலைகள் தீர்வல்ல...பிரச்னைகளைத் தீர்ப்பதைவிட்டு,கவலைகள்...அது பற்றியவனைத் தீர்த்து விடுகிறது!* கவலைகள்உயிர்மேயும் வெள்ளாடு...உடலரிக்கும் கறையான்!* கவலைகள்முக அழகை மூர்க்கமாக்குகிறது...சுமூகத்தை சுட்டெரிக்கிறதுகையாலாகாதவன் என்றஅவப்பெயரை அளிக்கிறது!* கவலைப்படுபவர்களைஉலகம் உதாரண புருஷராக்குவதில்லை...ஒதுக்கி விடுகிறது!* கவலை வெள்ளாடுமேயாமல் காக்கும்வேலி ஒன்று உண்டு...கவலைக் கறையானைக்கருவறுக்கும் மருந்துகைவசம் உண்டு!* வெண்ணையைகையில் வைத்துக் கொண்டு வேதனைப்படுவானேன்... கவலை எரிக்கும் நெருப்புவாழ்வு காக்கும் கவசம்வேறென்ன -சிரிப்பு மட்டும்தானே?— வளர்கவி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !