பனிக்கரடி ஓட்டல்!
'கொரோனா'வால் குறைந்து போன வருவாயை அதிகரிப்பதற்காக, நம் அண்டை நாடான சீனாவில் உள்ள வர்த்தகர்கள், பல புதுமையான யுக்திகளை கையாளுகின்றனர். ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஓட்டலின் மேல் தளத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான வசதி உள்ளது. இதன் தரைப் பகுதி, முற்றிலும் கண்ணாடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே, ஏராளமான பனிக்கட்டிகளை கொட்டி, அதில், நிஜமான பனிக்கரடிகளை உலவ விட்டுள்ளனர். சாப்பிடும் அறைக்கு எதிரிலும், கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கும் பனிக்கரடியை வலம் வர விட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள், உணவு அருந்தியபடியே, அந்த பனிக்கரடிகளின் சேட்டையை ரசிக்கலாம். இது வித்தியாமான முயற்சி என்றாலும், விலங்குகள் நல ஆர்வலர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். — ஜோல்னாபையன்